விஐடி முன்னாள் மாணவர் இந்திய வனப் பணி தேர்வில் சாதனை!
19 May 2026, 1:08 am

விஐடி முன்னாள் மாணவர் இந்திய வனப் பணி தேர்வில் சாதனை!

வேலூர், மே 18- வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால், யுபிஎஸ்சி இந்திய வனப் பணி தேர்வில் தேசிய அளவில் 110-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் பட்டம் பெற்றவர் ஆவார்.

அண்மையில் வெளியான இந்திய வனப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகளில் இவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இம்மாணவரின் சாத னையைப் பாராட்டிய விஐடி வேந்தர் கோ.விசு வநாதன் மற்றும் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரி வித்துள்ளனர்.

விஐடி முன்னாள் மாண வர்கள் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவது பெருமை யளிப்ப தாகவும், தொழில் நுட்பப் பின்னணியைக் கொண்ட சவுரப் குமாரின் வெற்றி நிர்வாகப் பணிக்கு வரும் பிற இளைஞர்க ளுக்குச் சிறந்த உதார ணம் என்றும் வேந்தர் விசுவ நாதன் குறிப் பிட்டுள்ளார்.