தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நடித்துக் கொண்டே உயிர் நீத்த விஸ்வநாததாஸ்

15 Jun 2026, 10:55 pm
நடித்துக் கொண்டே  உயிர் நீத்த விஸ்வநாததாஸ்

நடித்துக் கொண்டே உயிர் நீத்த விஸ்வநாததாஸ்

விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் நாள்பிறந் தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந் ததால், மேடை நாடகத் தின்பால் ஈர்க்கப்பட் டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்க ளில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர், தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல் களையும் இடை இடையே பாடினார். “கதர் கப்பல் கொடி தோணுதே’, “கரும் புத் தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்ப னவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். “வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவ நாததாசை என்றும் நினைவு படுத்துபவை. வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடித்தவர். ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை யடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடு தலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது. இதனால், இவரின் நாடகங்களுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. ஆனால், அப்போதும் தடையை மீறிப் பாடி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என காரணம் காட்டி பெண்கள் இவருடன் இணைந்து நடிக்க மறுத்தபோது தோழர் கே.பி. ஜானகியம்மாள் இணைந்து நடித்தார். 1940 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் நாள், தனது 54ஆவது வயதில், முருகன் வேடத் தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடை யிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. - பெரணமல்லூர் சேகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.