சிதம்பரத்தில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவேந்தல்
1 Jan 2026, 4:52 pm
<p><strong>சிதம்பரத்தில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவேந்தல்</strong></p>
<p>சிதம்பரம், ஜன.1- சிதம்பரம் வீனஸ் மழ லையர் பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் 82-ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி தலைவர் எம்.அன்பானந்தம் தலைமை வகித்தார். விழாவில் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி விஸ்வ நாததாஸ் தியாக செயல்கள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து அனைவரும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் நவச மாஜ் அமைப்பு 2026 மாதாந்திர நாள்காட்டி வெளியிடப்பட்டது. கடலூர் மாவட்டத் தலை வர் சுவாமிதுரை, செயலர் மொழிவேந்தன், பொரு ளாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
