முந்தய பக்கம்

விசுவக்குடி ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

24 May 2026, 9:15 pm
விசுவக்குடி ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
<p><strong>விசுவக்குடி ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு</strong></p><p>10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் பெரம்பலூர், மே 24- பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் 7ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலாமாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பெரம்ப லூர் மாவட்டமின்றி அரியலூர், தஞ்சாவூர், கரூர், கடலூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 650 ஜல்லிக்கட்டு காளைகளும், 350 மாடுபிடிவீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெரும் காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு மொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் விழா குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அனிதா தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டு, ஜல்லிக் கட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது . இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு கிரா மங்களில் இருந்தும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள் வருகைதந்த தையடுத்து பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் அவசர உதவிகளுக்காக மருத்துவ குழுவினர் சார்பில் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் முதலுதவி கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தன.</p>
Share
FacebookXWhatsAppTelegram