தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பார்வையற்றோர் சுதந்திரமாக வாக்களிக்க ஆடியோ வசதியுடன் கூடிய 'விவிபேட்' தேவை

11 Apr 2026, 5:30 am
பார்வையற்றோர் சுதந்திரமாக வாக்களிக்க ஆடியோ வசதியுடன் கூடிய 'விவிபேட்' தேவை
<p><strong>பார்வையற்றோர் சுதந்திரமாக வாக்களிக்க ஆடியோ வசதியுடன் கூடிய &#39;விவிபேட்&#39; தேவை</strong></p><p>தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை சென்னை, ஏப்.10- பார்வையற்ற வாக்காளர்கள் யாருடைய உதவியு மின்றி, ரகசியமான முறையில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய ஆடியோ வசதியுடன் கூடிய &#39;விவிபேட்&#39; இயந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என &quot;நேத்ரோதயா&quot; என்ற தொண்டு நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் கருவி, வாக்களித்ததை வெறும் காகிதச் சீட்டு மூலம் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. இது பார்வையற்றவர்களுக்குப் பயன் தராததால், அவர்கள் மற்றொருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இது வாக்கின் ரகசியத்தன்மை மற்றும் தனிமனித உரிமையை பாதிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1,27,405 பார்வையற்ற நபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.