விசிக தர்ணா போராட்டம்
24 Feb 2026, 3:55 pm
<p><strong>விசிக தர்ணா போராட்டம்</strong></p>
<p>ராணிப்பேட்டை, பிப். 23: கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவனைச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் அரவிந்தனை, ஆசிரியர் பரணி என்பவர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவன் பள்ளிக்குச் செல்ல அச்சமடைந்துள்ளான். இது தொடர்பாகப் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்படாததால், மேற்கு மாவட்டச் செயலாளர் பாபு வளவன் தலை மையில் தர்ணா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.</p>
