வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தரக்கோரிக்கை
9 Jul 2026, 9:04 pm
<p><strong>வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு தரக்கோரிக்கை</strong></p><p>விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் (Visakhapatnam Steel Plant - VSP) ஜூன் 8 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரி ழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த விஎஸ்பி ஆலையின் தலைவர், மேலாண்மை இயக்குநரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஆலை நிர்வாகத்திற்கு எதிரான தங்களது போ ராட்டத்தை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வியாழனன்று முதல் தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் சா. நர சிங்க ராவ், மாநிலச் செயலாளர் ஆர்.கே.எஸ்.வி.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் கடந்த மாதம் ஜூன் 8 அன்று நடந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரி ழந்தனர். இந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. விஎஸ்பி நிர்வாகத்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை நோட் டீஸ்கள் கிடப்பில் தான் உள்ளது. அதனை ஆராய்ந்து செயல்படுத்தி இருந்தால் இந்த பெரும் விபத்து நடந்தி ருக்காது. ஆலை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு பணிச் சூழலைப் பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டது. குறிப்பாக ஆலையில் தங்களுடைய ஷிப்ட் (பணி நேரம்) முடிந்த பிறகு தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவ தற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள் ளது. இந்த வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. </p>
