விசாகப்பட்டினத்தில் கோர விபத்து உருகிய உலோகம் கொட்டி 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
8 Jun 2026, 9:02 pm
<p><strong>விசாகப்பட்டினத்தில் கோர விபத்து உருகிய உலோகம் கொட்டி 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு!</strong> </p><p>விசாகப்பட்டினம், ஜூன் 8 - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ளது விசாக் எஃகு ஆலை. இந்த ஆலையில் திங்களன்று உருகிய உலோகம் இருந்த ஒரு பெரிய தொட்டி நிலைதவறி விழுந்ததில், ஆலையின் எஃகு உருக்கும் நிலையம் 1இல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரோடு உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். பல டன் எஃகு குழம்பு கீழே கொட்டுவதற்கு சில நொடிகள் முன்பாக ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், பலத்த தீக்காயங்கள் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜூன் 2012-ஆம் ஆண்டும், இதே ஆலையில், சோதனை ஓட்டத்தின் போது விபத்து ஏற்பட்டு 16 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p>
