தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

180 பயனாளிகளுக்கு ரூ.16.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

13 Jun 2026, 10:06 pm
180 பயனாளிகளுக்கு ரூ.16.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
<p><strong>180 பயனாளிகளுக்கு ரூ.16.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p><p>அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வழங்கினார் விருதுநகர், ஜூன் 13- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.செல்வம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, சார் ஆட்சியர் முகமது இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் மற்றும் தொழில், முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ச.கீர்த்தனா ஆகியோர் சிறுபான் மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, 60 முஸ்லிம் மகளிருக்கு ரூ.15.78 லட்சம் மதிப்பிலான கல்வி உத வித்தொகை, முதியோர் மற்றும் விதவை உத வித்தொகை, சிறுதொழில் விரிவாக்க நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 15 பேருக்கு ரூ.81 ஆயிரம் மதிப்பி லான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப் பட்டன. அத்துடன், 4 பேருக்கு உலமாக்கள் நல வாரிய அடையாள அட்டைகளும், ஒருவ ருக்கு கிறிஸ்தவ உபதேசியர் நலவாரிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. மொத்தம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் த.ஜான்சன் தேவசகாயம், வருவாய் கோட்டாட்சியர்கள் கனகராஜ் (சாத்தூர்), மாரிமுத்து (அருப்புக்கோட்டை), கண்கா ணிப்பாளர் வே.பாண்டீஸ்வரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அமைச்சர் ஏ.எம்.ஷாஜ ஹான் விருதுநகரில் உள்ள தூய இஞ்ஞாசி யர் பேராலயத்திற்குச் சென்று பங்குத் தந்தை மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி னார். தொடர்ந்து அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் உள்ள ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோ சனை நடத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.