விண்ணப்பித்து 2 ஆண்டு ஆகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை பார்வை மாற்றுத்திறனாளி வேதனை
29 May 2026, 10:10 pm

விண்ணப்பித்து 2 ஆண்டு ஆகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை பார்வை மாற்றுத்திறனாளி வேதனை

விருதுநகர், மே 29- விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகித நிரந்தர ஊனமுள்ள கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் உதவித் தொகை கோரி மனு அளித்து சுமார் 2 ஆண் டுகளாகியும் உதவித் தொகை கிடைக்க வில்லை.

இதனால் அவர் மிகுந்த மன வேத னையில் உள்ளார்.

அருப்புக்கோட்டை வட்டம், கல்லூ ரணி அருகேயுள்ளது முத்துராமலிங்க புரம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சீனி வாசகன் (48).

இவருடைய இரு கண்களின் பார்வையிலும் குறைபாடு உள்ளது. எனவே, சாதாரண மனிதர்களைப் போல் அனைத்து வேலையையும் இவரால் செய்ய முடியாது.

எனவே, இவர் மாற்றுத் திறனாளிக ளுக்கான அட்டை வேண்டி விண்ணப்பித் துள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்து வர்கள் 100 விழுக்காடு ஊனம் உள்ளது என சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கியுள்ளனர்.

எனவே, உதவித் தொகை கோரி கடந்த 2023 செப்டம்பர் 2 அன்று இ-சேவை மையத்தில் மனு அளித்துள்ளார்.

ஆனால் உதவித் தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனிவாசகன் கூறுகை யில், நான் தனியாக எங்கும் செல்ல இய லாது.

ஒருவர் உதவிக்கு இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு உதவித் தொகைக்கான மனு அளித்தேன். மேலும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுலகத்திலும் மனுக் கொடுத்தேன்.

ஆனால் உதவித் தொகை கிடைக்க வில்லை. பலமுறை நேரில் வந்து கேட்டா லும் தொடர்ந்து அலைக் கழிக்கவே செய் கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.டி.நடராஜன் கூறு கையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்த ஏராள மான மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 2 ஆண்டுகளாக உதவித் தொகை வழங் கப்படவில்லை.

இதேநிலை நீடித்தால் அனைவரையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.