தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆற்றுப் புறம்போக்கில் ரூ.50 லட்சம் அளவில் மணல் கொள்ளை

8 Aug 2026, 11:16 pm
ஆற்றுப் புறம்போக்கில் ரூ.50 லட்சம் அளவில் மணல் கொள்ளை

ஆற்றுப் புறம்போக்கில் ரூ.50 லட்சம் அளவில் மணல் கொள்ளை

நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்விருதுநகர், ஆக.8-விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அருணாச்சலாபுரம் அருகே ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் மதிப்பில் மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை வட்டத் திற்கு உட்பட்டது அருணாச்சலபுரம். தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் எல்கைப் பகுதியாக இது அமைந்துள்ளது. இங்கு மாவட்டத்தின் மிக முக்கிய நதியாக வைப்பாறு உள்ளது. ஆற்றின் ஒரு கரையில் மேலாண்மறைநாடு கிராமமும் மறுகரையில் அருணாச்சலபுரமும் உள்ளது.

மழைக் காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இப்பகுதியில் உள்ள ஆற்றுப் புறம் போக்கில் மணல் உள்ளதால், நிலத்தடி நீர் நல்ல முறையில் கிடைத்து வருகிறது.இதனால் இருபுறங்களிலும் விவசாயம் செழித் துள்ளன.இந்த நிலையில், வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் அருணாச்சலபுரம் பகுதியில் சரிவர ரோந்துப் பணிகளுக்கு வராதததை அறிந்த மணல் கொள்ளையர்கள், சுமார் 5 ஏக்கர் ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு மிகப் பெரிய பள்ளங் கள் தோண்டி ரூ.50 லட்சம் மதிப்பிலான மணலை இரவோடு இரவாக ராட்சத மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளில் கடத்திச் சென்று சட்டவிரோதமாக விற் பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆற்றின் இயற்கையான அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, கனிமவளத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அருணாச்சலபுரம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.மேலும், உடனடியாக விசாரணை நடத்தி, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கே.கண்ணன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.