தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநெல்வேலி விரைவு செய்திகள்

4 Oct 2026, 11:44 pm
திருநெல்வேலி  விரைவு செய்திகள்

காந்தி ஜெயந்திவிடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், அக்.4-காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்திய 65 கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டம், 1958-ன் படி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தேசிய விடுமுறை தினங்களில் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல் லது மாற்று விடுமுறை வழங்க வேண்டும். தொழிலாபணியில் ஈடுபடுத்தும்போது, அவர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று, சிறப்பு விடுமுறை தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந் தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.இந்நிலையில், உரிய படிவங்களை வழங்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 34 கடைகள், 30 உணவு நிறுவனங்கள், ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 65 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மாரத்தான் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.4-ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சிவந்திப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாரத்தான் போட்டிநடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.8 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இப்போட்டியை சிவந்திப்பட்டி நாடார் பள்ளிகளின் தலைவர் செல்லமுத்து நாடார், மம்சாபுரம் காவல் ஆய்வாளர் அமுதவள்ளி, தமிழ்நாடு பாரம் பரிய சித்தா சங்கத் தலைவர் பிரம்மஸ்ரீ கோவிந்தன், மம்சாபுரம் மாரத்தான் கிளப் தலைவர் ராஜாக்கனி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், மதுரைவீரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, பேருந்து நிலையம், தேவர் சிலை, திருவில்லிபுத்தூர் பிரதான சாலை, மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகம், செண்பகத்தோப்பு சாலை,அன்னையன் தோப்பு பண்ணை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.

போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழிநெடுகிலும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துவழங்கப்பட்டது.

குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு அபாயம்

விருதுநகர், அக்.4-விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.விருதுநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றான பழைய சிவகாசி சாலை, கூரைக்குண்டு மற்றும் பாவாலி ஊராட்சிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் தினசரி குப்பைசேகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் சாலையோரங்களிலும், கௌசிகா ஆற்றிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளும்குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக்கேரி பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தினசரி வீடுதோறும் குப்பை சேகரிக்கும் பணியை முறையாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது நிதியில் முறைகேடுபிடிஓ உள்பட 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம்

அருப்புக்கோட்டை, அக்.4-அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குழாய்கள் பதிக்காமலேயே பணிகள் நடைபெற்றதாகக் கணக்கு காட்டி, பொது நிதியில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 5 அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பந்தல்குடி, கோவிலாங்குளம், செட்டிகுறிச்சி, நமச்சிவாயபுரம், பாளையம்பட்டி உள்ளிட்ட ளில் குழாய்கள் பதிக்காமல், ஒப்பந்ததாரர்மூலம் பணிகள் நடைபெற்றதாகக் கணக்கு காட்டி நிதி முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கடமையில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும் கூறி, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளர் அர்ஜுனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கண்ணன், கணக்காளர்சரவணக்குமார், ஊரக நல அலுவலர் பரக்கத் பபிதா பானு ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கிலிபட்டியில் கால்நடை மருத்துவமனை அமைத்திடுக! பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

தென்காசி, அக்.4-சிங்கிலிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தென்காசி மாவட்டம், சிங்கிலிபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கிளை அமைப்புக் கூட்டம் அக்டோபர் 4 அன்று சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜகோபால், மாவட்டத் துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பேசினர். இதில் கிளைத் தலைவராக பார்வதி, கிளைச் செயலாளராக பிச்சை, பொருளாளராக மு. வேலுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிங்கிலிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்துக் கொடுக்க வேண்டும்.பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.பால் உற்பத்தியாளர்களுக்கு மாட்டுக் கொட்டகைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றுவலியுறுத்தி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

சென்னை- செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையால் பயணிகள் கடும் அவதி

திருநெல்வேலி,அக்.4- ​சென்னை - திருச்செந்தூர் இடையே நெல்லை வழியாக இரு மார்க்கங்களிலும் தினந்தோறும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்இயக்கப்பட்டு வருகிறது.சனிக்கிழமை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்துசேர்ந்தது.ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் ஏறியபயணி ஒருவர் எஸ்-1 என்ற பெட்டியில் ஏறி அதில் இருந்த கழிவறை பகுதியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ரயிலின் கழிவறை கதவு மற்றும் அதன் அமைப்பில் போதிய மறைப்பு இல்லாத வகையில் இடைவெளி காணப்படுகிறது. இதனால் பயணிகள் கழிவறை செல்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெண் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவதில் கடும் சிரமத்தையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எதிர்கொள்வதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ​

​பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

​மேலும், பயணிகளிடம் கட்டணம் வசூலித்து சேவை வழங்கும் ரயில்வே நிர்வாகம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பராமரிக்காமல் இருப்பது ஏன்?என்றும் பயணிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தேனி, அக்.4-தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளக்கெவி, வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து அருவிக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.

சமீபகாலமாக நிலவி வரும் தட்பவெப்ப மாற்றம் மற்றும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து சீராக அதிகரித்துள்ளது.தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையும் இணைந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கும்பக்கரை அருவிக்கு வந்தனர். வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய குளிர்ந்த நீரில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை உற்சாகமாக நீராடி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.