திருச்சி விரைவு செய்திகள்
6 Jun 2026, 9:58 pm

மலர்ச் செடி நட்டு விழிப்புணர்வு

திருவில்லிபுத்தூர், ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருவில்லி புத்தூர் நகர நடைபயிற்சியாளர்கள் கிளப் சார்பில் திருப்பாற்கடல் நடைமேடை பகுதியில் மலர்ச் செடிகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் எஸ்.வேல்முரு கன் தலைமை தாங்கினார். அமைப்பின் இணைச் செயலா ளரும் பசுமைக் காவலருமான பி.காளிராஜ், மலர்ச் செடி கள் நடும் பணிக்கான ஏற்பாடுகளை செய்தார். இந்த நிகழ்வில் அமைப்பின் மூத்த ஆலோசகர் டி. நாரா யணசாமி, செயலாளர் பி. பாலகிருஷ்ணன், உறுப்பி னர்கள் ஏ.நல்லமுத்து, சி.எஸ்.முனியாண்டி, வழக்கறிஞர் எம்.நெப்போலியன், சமூக ஆர்வலர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் மலர்ச் செடிகள் நடும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பசுமையை அதி கரிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

ஓய்வூதியர்களுக்கான வங்கி சேவை விளக்கக் கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 6- திருவில்லிபுத்தூரில் உள்ள எஸ்பிஐ கிளையில், அரசு துறை ஓய்வூதியர்களுக்கான வங்கி சேவைகள் தொடர் பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. வங்கியின் முதுநிலை மேலாளரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வங்கி சேவைகள், ஓய்வூதிய கணக்குகள் பராமரிப்பு, டிஜிட்டல் வங்கி சேவைகள், இணையவழி பரிவர்த்தனைகள், ஏடிஎம் மற்றும் மொபைல் வங்கி பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்க மளிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.பாலகிருஷ்ணன், வட்டக்கிளைத் தலைவர் எஸ்.ஜி. கருப்பையா மற்றும் வட்டக்கிளைச் செயலாளர் ஆர்.ராஜமாணிக்கம் ஆகியோர் மேற்கொண்டனர். நிகழ்வில் வட்டக்கிளை துணைத் தலைவர் ஐ. காளீஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம.சீனி வாசன், மாவட்ட இணைச் செயலாளர் எம்.சரஸ்வதி, வட்டக்கிளை இணைச் செயலாளர்கள் கே.சிவயோகம், பி.முத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டா ரத்தில் “விளைநிலங்களை காப்போம்” இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரை யாடல் கூட்டம், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலை யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், விருது நகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், பருத்தி ஆராய்ச்சி நிலையத் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம ளித்தனர்.

பட்டுப்பூச்சி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

திருவில்லிபுத்தூர், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிள வக்கல் அணை அருகே அமைந்துள்ள பட்டுப்பூச்சி கிரா மத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சிறப்பாக நடை பெற்றது. விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்ப கத்தின் துணை இயக்குநர் ரவி மீனா முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஒ.சுகபுத்ரா மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதிகாரி கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்றனர். பின்னர், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலை வர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி வனப் பாது காவலர் ஞானப்பழம், வனச் சரக அலுவலர்கள், பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், கிராம வனக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மாவட்ட ஆட்சியர் தகவல் விருதுநகர், ஜூன் 6- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தவுள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகரில் தொடங்கப்பட உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயி லும் வட்டம் மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான நூல்கள் அடங்கிய நவீன நூல கம் மற்றும் அதிவேக வை-பை வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறி விப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப் பட உள்ளது. இதையொட்டி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 8-ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் தொடங்கப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் நடத் தப்படவுள்ளன. தேர்வர்களுக்கு விலை யில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படுவது டன், பாடவாரியான தேர்வுகள் மற்றும் முழு மையான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கூகுள் படிவம் மூலம் பதிவு செய்யலாம். மேலும், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை போட்டித் தேர்வு களுக்கு தயாராகும் இளைஞர்கள் முழு மையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விஷம் குடித்து ஓட்டுநர் தற்கொலை

தேனி, ஜூன் 6- போடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டிராக்டர் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போடி அருகே சன்னாசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் ரஞ்சித்குமார் (38), டிராக்டர் ஓட்டுநராக பணி யாற்றி வந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவ திப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமையால் மன உளைச்சல் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை, ஜூன் 6- மதுரை அருகே உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில், சனிக்கிழமை பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அதிகமாகச் சென்று கொண்டி ருந்த நேரத்தில், வள்ளி (45) என்ற பெண் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. வீட்டு வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த வள்ளி, நீண்ட நாட்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பச் சிரமங்களால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை மற்றும் பொரு ளாதார நெருக்கடியே இந்த முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்க ளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொருளாதார நெருக்கடியில் சிக்கிய குடும்பங்களுக்கு சமூகப் பாது காப்பு மற்றும் ஆதரவு திட்டங்கள் எவ்வளவு அவசியமானவை என்ப தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

தேவாரம் அருகே பசுமாடு திருட்டு

தேனி, ஜூன் 6- தேவாரம் அருகே தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டி ருந்த பசுமாடு திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த அருள்புஷ்பம் (40), பசுமாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற அவர், அருகிலுள்ள தோட்டத்தில் ஆறு பசுமாடுகளை கட்டிவைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற தாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சென்று பார்த்தபோது, ஒரு பசு மாட்டை காணவில்லை. பல இடங்களில் தேடியும் மாடு கிடைக்காததால், இதுகுறித்து தேவாரம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பசுமாட்டை திருடிச் சென்றவர்களை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.