4 வழிச் சாலை பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்
26 May 2026, 10:13 pm
<p><strong>4 வழிச் சாலை பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்</strong></p><p>விருதுநகர், மே 26- விருதுநகர் – சிவகாசி 4 வழிச் சாலைப் பணிக்காக ஆமத்தூரில் நெடுஞ்சா லைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். தமிழக ஒருங்கிணைந்த சாலை மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ் சாலையான விருதுநகர் – சிவகாசி சாலை யை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆமத்தூரில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாலங்களை அகலப்படுத்தும் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து, அரசு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டி ருந்த கடைகள் மற்றும் வீடுகள் தொடர் பாக தாசில்தார் மூலம் நில அளவீடு மேற் கொள்ளப்பட்டது. பின்னர், ஆக்கிரமிப்பு களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, காவல்துறை, வரு வாய்துறை மற்றும் மின்சாரத்துறை அதி காரிகள் பாதுகாப்புடன் செவ்வாய்க் கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளர்கள் கணேசன், மதி வாணன், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
