தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

3 Jun 2026, 9:48 pm
திருச்சி விரைவு செய்திகள்

இராஜபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

இராஜபாளையம், ஜூன் 3- இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் அறு வடைக்கு தயாராக உள்ள நெல்லை விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யும் நோக்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பல்வேறு இடங் களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. முகவூர், தேவதானம், கோவிலூர் உள்ளிட்ட பகுதி களில் நடைபெற்ற திறப்பு விழாவில், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. திறப்பு விழாவைத் தொடர்ந்து, விவசாயிகளின் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, கொள் முதல் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணிகள் விரைவில் தொடங் கப்பட உள்ளன. சுமார் 3 மாதங்கள் வரை நெல் கொள் முதல் நடவடிக்கைகள் நடைபெறும் என தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழாவில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்களுக்கு உடல் எடை சீரமைப்பு இலவச பயிற்சி

விருதுநகர், ஜூன் 3- தாட்கோ நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குப் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உணவு ஊட்டச்சத்தியல் மற்றும் உடல் எடை சீரமைப்பு தொடர்பான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத் தும் இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு வதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் தங்குமிடம் மற்றும் அதற்கான செலவுகளை தாட்கோ நிறுவனம் ஏற்கும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனம் மூலமாக வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான

மூலம் தங்களது விபரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வா

கம் தெரிவித்துள்ளது. விருதுநகரில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

விருதுநகர், ஜூன் 3- விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றி வந்த 14 வட்டார வளர்ச்சி அலு வலர்களை (பி.டி.ஓ.) இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி யாற்றி வந்த இரா. லலிதா, விருதுநகரில் உள்ள ஊராட்சிகள் தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த இராமச்சந்திரன், விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சீனிவாசன், நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், நரிக்குடியில் பணியாற்றி வந்த செல்வக்குமார், திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சுழியில் பணியாற்றி வந்த புகழேந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றி வந்த ராமராஜ், திருவில்லி புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த மகேஸ்வரி, திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலராக (ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த பத்மினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றி வந்த ஜெயந்தி, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள் ளார். சாத்தூரில் பணியாற்றி வந்த சண்முகப்பிரியா, காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், காரியாபட்டியில் பணியாற்றி வந்த உஷா, சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த காஜாமைதீன் பந்தே, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்த மகேஸ்வரன், சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிரோன் கேமராவில் பதிவான கிராவல் மண் கடத்தல்: 3 பேர் கைது

சிவகங்கை, ஜூன் 3- சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆல வாக்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரவு மற்றும் அதிகாலை நேரங்க ளில் கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதியழகன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கிராம இளைஞர்கள் டிரோன் கேமரா மூலம் கண்கா ணிப்பு மேற்கொண்டனர். அப்போது ஜேசிபி இயந்தி ரம் மற்றும் டிப்பர் லாரி உதவியுடன் மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம மக்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தகவல றிந்து அங்கு வந்த சிலர் வாகனங்களை மீட்டுச் செல்ல முயன்றதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மதகுபட்டி போலீசார் முன்னிலையில், டிரைவர்களான ராதா கிருஷ்ணன், வெங்கட்ராமன் மற்றும் இளங்கம்பன் ஆகியோரை கிராம மக்கள் ஒப்படைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் சௌமியா நாராய ணன் அளித்த புகாரின் பேரில், மதகுபட்டி போலீசார் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இளங்கம் பன் கடந்த பல ஆண்டுகளாக சட்டவிரோத மண் எடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், செங்கல் சூளைக்காக மண் எடுப்பதாகக் கூறி கிராவல் மண்ணை விற்பனை செய்து வந்ததாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அரசியல் கட்சிப் பொறுப்புகளில் இருப்பதால், அரசி யல் செல்வாக்கைப் பயன்படுத்தி கிராம மக்களை மிரட்டுவதாகவும், மண் கடத்தலை எதிர்த்து பேசு பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஈச்சோடி கண்மாய், சின்ன கரிசக்கண்மாய் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற சட்டவிரோத மண் எடுப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திடுக!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு மதுரை, ஜூன் 3- இராமநாதபுரம் மாவட்டம் தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டிடங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தோளூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமம் வழியாக நல்லுக்குறிச்சி பகுதிக்கு செல்லும் வரத்து கால்வாய் அமைந்துள்ளதாக வும், அந்த பகுதி நீர்நிலைப் புறம்போக்கு நிலமாக வகைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மழைநீர் சீராக செல்லும் வகையில் அரசு சார்பில் குழாய் களும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சிலர் நீர்நிலைப் பகுதியை ஆக்கிர மித்து, நில வகைப்பாட்டை முறைகேடாக மாற்றி பட்டா பெற்று குடியிருப்பு வீடுகள் கட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக நீர்வரத்து பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டி ருந்தது. எனவே, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட பகுதி நீர்நிலைப் புறம்போக்கு நிலமாக இருந்த போதிலும், முறைகேடாக நில வகை மாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “நீர்நிலைப் பகுதி களில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்க முடியாது. நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக ஏற்க னவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி, நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிர மிப்புகள் இருப்பது உறுதியானால் அவற்றை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரி களுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

சாக்குலூத்து மெட்டுச் சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆட்சியரிடம் கம்பம் எம்எல்ஏ வலியுறுத்தல்

தேனி, ஜூன் 3- தேவாரம் சாக்குலூத்து மெட்டுச் சாலையை பொதுமக் களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவ டிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்.வைத்திநாதனிடம், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார். தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப் பேற்றுள்ள டாக்டர் ஆர்.வைத்திநாதனை நேரில் சந்தித்த கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, தேவாரம் -சாக்குலூத்து மெட்டுச் சாலை தொடர்பாக அண்மையில் அதிகாரிகளு டன் நேரில் ஆய்வு மேற்கொண்டதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அப்போது, தேனி, தேவாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்டகால கோரிக்கை யாக உள்ள சாக்குலூத்து மெட்டுச் சாலையை பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி னார். மேலும், இச்சாலை அமைக்கப்பட்டால் தேனி மாவட்டத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையேயான போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், இரு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பயனளிக்கும் என்று தெரிவித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்.வைத்திநாதன், சாலை அமையவுள்ள வனப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

சபரிமலையில் வழிபாட்டுக்கான முன்பதிவுகள் மும்முரம்

தேனி, ஜூன் 3- சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவுள்ள மாதாந்திர வழிபாட்டிற்கான ஆன்லைன் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு இரண்டு மாதங்கள் தொடர் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மிதுனம் (ஆனி) மாத வழிபாட்டிற்காக வரும் ஜூன் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அன்றிரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு கின்றனர். இதன்படி மாதாந்திர வழிபாட்டுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் காலத்தை விட மாதாந்திர பூஜைகளின் போது கூட்ட நெரிசல் குறைவாக இருப்பதால், ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் முன் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி கள் கூறுகையில், தற்போது பத்தினம்திட்டா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், பக்தர்கள் மழைக் காலத்திற்கேற்ற பாதுகாப்பு உபகர ணங்களுடன் வர வேண்டும். மேலும், மலைப்பாதையில் கவனமாகவும் நிதானமாகவும் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு ஆட்சியரிடம் ஆட்சேபணை தெரிவிக்க உத்தரவு

மதுரை, ஜூன் 3- தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் பகுதியில் கல் குவாரி செயல்படுத்த அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் தனது ஆட்சேபணைகளை தேனி மாவட்ட ஆட்சியரிடம் முறை யாக தெரிவிக்க வேண்டும் என்றும், அதனை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனுவில், தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிரா மத்தில் கல்குவாரி செயல்படுத்தப்பட்டால் அப்பகுதி யின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே, திம்மரசநாயக்கனூர் பகுதியில் கல்குவாரி செயல்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என சம்பநு துப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தனது ஆட்சேபணைகளை விரிவாகக் குறிப்பிட்டு தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் சட்ட விதிமுறைகளின்படி பரி சீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோவில், மருத்துவமனை அருகே செயல்படும் மதுபான விடுதிகள் மீது நடவடிக்கை

மதுரை, ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டத் தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் தனியார் மதுபான விடு தியை மூடுவதற்கோ அல் லது வேறு இடத்திற்கு மாற் றுவதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், திண்டுக் கல்–பழனி சாலையில் செயல்பட்டு வரும் “ஹனிபி மனமகிழ் மன்றம்” என்ற தனி யார் மதுபான விடுதியின் அருகே சிவன் கோவில், மருத்துவமனை மற்றும் காய் கறி சந்தை அமைந்துள்ள தாக தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளதாகவும், குறிப்பாக மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உரு வாகி வருவதாகவும் மனு வில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மதுபான விடுதி யை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, பொதுமக் களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த மதுபான விடுதி யை மூட உத்தரவிட வேண் டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு புதன் கிழமை நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்க றிஞர், சம்பந்தப்பட்ட மது பான விடுதி நெடுஞ்சாலை ஓரத்தில், பொதுமக்கள் அதி கம் கூடும் பகுதியில் விதி முறைகளுக்கு முரணாக செயல்பட்டு வருவதாக வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மதுபான விடுதி யைச் சுற்றி கோவில், மருத்து வமனை மற்றும் காய்கறி சந்தை அமைந்திருப்பது தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களில் தெளிவா கத் தெரிகிறது. பொதுமக்க ளுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை ஏன் அகற்ற வில்லை?” என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சம்பந்தப் பட்ட மதுபான விடுதியை மூடுவதற்கோ அல்லது வேறு இடத்திற்கு மாற்று வதற்கோ உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி கள், இதுதொடர்பாக திண் டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு ஆணை யாளர் தரப்பில் மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.