தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்றைய நிகழ்ச்சி

25 Sept 2026, 8:03 pm
இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாகுழு அலுவலக கட்டிடத் திறப்பு விழா.இடம்: காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பின்புறம், சிவானந்தமடம் தெரு. சனிக்கிழமை மாலை 4 மணி.பங்கேற்போர்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநி

லக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன்.

வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து ஒருவர் பலி

வெம்பக்கோட்டை, செப்.25-வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் வீட்டின்அருகே பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (60). இவரது வீட்டின்பின்புறம் சட்ட விரோதமாக தகர செட்அமைத்து பட்டாசு மற்றும் அதைத் தயாரிக்க பயன்படும்வேதிப் பொருட்கள் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.அதை அப்புறப்படுத்தும் போது, ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில்மைக்கேல்ராஜ் தீக்காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பள்ளி அருகே கஞ்சா பொட்டலங்களுடன் இளைஞர் கைதுஇராஜபாளையம்,செப்.25-

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பாக்யராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த ராஜபாளையம் கம்மாபட்டி வடக்குதெருவை சேர்ந்த சூர்யா (வயது 25) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

17 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

இராஜபாளையம்,செப்.25- விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவில் தெற்கு காவல்துறையினர் வாகனச்சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 17 கிலோ புகையிலை பொருள்கள் ஒருபையில் கொண்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்துசர்ச் தெருவை சேர்ந்த உதயசூரியன்( வயது 44) என்றவாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

சாலை விபத்தில் கட்டிடத் தொழிலாளி பலி

வெம்பக்கோட்டை, செப்.,25-வெம்பக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீதுசரக்கு வண்டி மோதியதில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் மதியழகன் (30). கட்டிடத் தொழிலாளியான இவர்சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வெம்பக்கோட்டையில் இருந்து முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆற்றுப் பாலம் அருகே உள்ள வளைவில் வந்த போது, திருவேங்கடம்சிவகாசி நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோதியது. இதில் மதியழகன் பலத்தக் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரின் மனைவி மொரின் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநர்பாலமுருகன் (48) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.