தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அணுகுசாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

13 May 2026, 10:15 pm
அணுகுசாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

அணுகுசாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் பொதுமக்கள்

விருதுநகர், மே 13- விருதுநகர் – சாத்தூர் நான்கு வழிச் சாலையோர அணுகுசாலையில் தொடர்ந்து கோழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதி யில் கடுமையான சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. விருதுநகர் – சாத்தூர் நான்கு வழிச்சாலையுடன் இணைந்துள்ள அணுகுசாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராள மான பேருந்துகள் சென்று வரு கின்றன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட முக் கிய இடங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்க ளில் பயணம் செய்து வருகின்றனர். பலர் இந்தச் சாலையை நடைபயிற்சிக் காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அணுகுசாலையின் ஓரங்களில் அடிக்கடி கோழிக் கழிவு கள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படு வதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தெரு நாய்கள் அந்தக் கழிவுகளை இழுத்துச் சிதறடித்து சாலையின் நடுப்பகுதியில் வீசிச் செல்வதால், சுகாதார பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுவ தாகவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் கடும் அவதியடைந்து வரு வதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட சுகாதாரத் துறை யினர் உடனடி நடவடிக்கை எடுத்து, அணுகுசாலையில் கோழிக் கழிவு கள் மற்றும் குப்பைகள் கொட்டப்படு வதை தடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.