திருச்சி விரைவு செய்திகள்
23 May 2026, 10:18 pm

விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கியில் தீ விபத்து

விருதுநகர், மே 23- விருதுநகர் கச்சேரி சாலையில் ஏராளமான வங்கி கள் உள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலை யில், பாரத ஸ்டேட் வங்கியில் புதுப்பிக்கும் பணிகள் நடை பெற்றது. வங்கியின் முதல் மாடியின் பின்புறம் பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையிலி ருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் வங்கியை விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் தீ மள மளவெனப் பரவியது. இதையடுத்து, அவ்வழியே சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பழைய ஆவணங்கள் எரிந்து போனதாக கூறப்படுகிறது. வங்கி யில் திடீரென தீப்பிடித்த சம்பவத்தால் கச்சேரி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய வட்டாட்சியர் பதவியேற்பு

திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பாலமுருகன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகாசியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியாற்றி வந்த அருளானந்தம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்ற அருளானந் தத்தை அலுவலக சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்தினர்.

கஞ்சா விற்பனை: இருவர் கைது

திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யம்பட்டி கள்ளர் பள்ளி அருகே விநாயகர் கோவில் முன்பு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முருக ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அய்யம் பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த சிவனம்மாள் மற்றும் ரகு ஆகியோரை விசாரித்ததில், அவர்களிடம் 50 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், மே 23- மம்சாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மக ரிஷி வித்யா மந்திர் பள்ளி அருகே சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காந்திநகரை சேர்ந்த காளியம்மாள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற் பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2.25 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல், வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவர் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த புகையிலைப் பொருட்களை பறி முதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை: 3 பேர் கைது

இராமநாதபுரம், மே 23- சாயல்குடி அருகே நரிப்பையூர் வெள்ளப்பட்டி கடற்கரையில் கடந்த 16-ஆம் தேதி காயங்களுடன் கரை ஒதுங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் கன்னிராஜபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் (35) என்பது தெரியவந்தது. பிரேத பரிசோத னையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியா னது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கையுடன் இருந்த தகாத உறவை கைவிட மறுத்ததால் சிலம்பரசனை கொலை செய்ததாக கண்ணன் (45) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

குடிநீர் மோட்டார் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் விநியோக குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நகராட்சி உதவி பொறியாளர் திவாகர் தலைமையிலான குழுவினர் பல்வேறு வார்டுகளில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 30 வீடுகளில் ஆய்வு செய்ததில், 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மோட் டார் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

சுற்றுச்சூழல் துறையில் அதிரடி மாற்றங்கள் வரும் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கே.ராஜீவ் பேட்டி

மதுரை, மே 23- தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.ராஜீவ் சென்னையிலிருந்து விமா னம் மூலம் மதுரை வந்த டைந்தார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய் தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அமைச்ச ரான பிறகு முதல் முறையாக என் சொந்த மாவட்டமான இராமநாதபுரத்துக்கு பய ணம் செய்கிறேன். சுற்றுச் சூழல் துறையில் மக்கள் நேர டியாக உணரக்கூடிய பல மாற்றங்களை விரைவில் பார்க்க உள்ளீர்கள்” என்றார். மேலும் அவர் கூறுகை யில், “இராமநாதபுரம் மாவட் டம் இன்னும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. குறிப் பாக குடிநீர் பிரச்சனை பெரிய சவாலாக உள்ளது. இந்த பிரச்சனையை முழு மையாக தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப் படும். அதேபோல் இராம நாதபுரம் மாவட்டத்தில் சுற் றுலா வளர்ச்சிக்கும் முக்கி யத்துவம் அளிக்கப்படும். இராமேஸ்வரம் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில் கள் உள்ளதால், சுற்றுலா வச திகளை மேம்படுத்த திட்டங் கள் செயல்படுத்தப்படும்” என்றார். இராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பேசிய அவர், “சிலர் துணிகளை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்ற னர். இதுகுறித்து ஆய்வு செய்து முறையான நடவ டிக்கை எடுக்கப்படும். தமிழ் நாட்டை சுத்தமான மாநில மாக மாற்ற அரசு உறுதியாக செயல்படும்” என்று தெரி வித்தார். மேலும், “மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை முறை யாக பிரிக்கும் திட்டம் தீவிர மாக செயல்படுத்தப்படும். மஞ்சப்பை திட்டம் இந்த முறை தோல்வியடையாது. செயல்முறை ரீதியாக மாற் றங்களை கொண்டு வரு வோம்” என்றார். ஆறுகளில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, “இதுகுறித்து விரி வான ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். விதிமுறை களை மீறுவோர் மீது பார பட்சமின்றி கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும். இனிமேல் எச்சரிக்கை மட்டு மல்ல, நேரடி செயல்பாடு கள் இருக்கும்” என்று அமை ச்சர் கே.ராஜீவ் தெரிவித்தார்.

மே 30 முதல் விருதுநகர் சிஐடியு அலுவலகத்தில் அரசுப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைக்கிறார்

விருதுநகர், மே 23- விருதுநகரில் உள்ள சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மே 30 முதல் துவங்கப்படுகிறது. இதுகுறித்த அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா பத்திரிகையா ளர்கள் சந்திப்பில் கூறியதாவது: விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினை வகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் சிஐடியு மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மே 30 முதல் துவங்கப்படு கிறது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட வரு வாய் அலுவலர் ஆனந்தி துவக்கி வைக்க உள்ளார். கடந்த 30 வருடங்களாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி பல ஆயிரம் இளைஞர் களுக்கு அரசுப் பணிகளை பெற்றுத் தந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர் ரவீந்திரன், வெ.குருசாமி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் இப்பயிற்சி களை வழங்க உள்ளனர். குறிப்பாக, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான இல வசப் பயிற்சிகள் எளிமையான முறையில் இங்கு நடத்தப்படும். எனவே, ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள், நகர் மற்றும் கிராமப்புறங்க ளைச் சேர்ந்த அரசு வேலைக்காக காத்தி ருக்கும் இளைஞர்களும் இளம் பெண்க ளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வாழ்வில் முன்னேறிட வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக, இச்சந்திப்பின் போது, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வெ.குருசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் அவதிப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம்

திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 மற்றும் நிலை-2 பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளதால், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். முன்னதாக பணியாற்றிய ஆய்வாளர் பூர்ணலதா சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, தற்போது இராஜ பாளையம் அலுவலகத்தில் பணியாற்றும் கண்ணன் கூடுதல் பொறுப்பாக இந்த அலுவலகத்தையும் கவனித்து வருகிறார். ஆரம்பத்தில் வாரத்தில் 2 நாட்கள் வந்த அவர், தற்போது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாகனப் பதிவுகள், உரிமம் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல சேவை கள் தாமதமாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக இரு மோட்டார் வாகன ஆய்வாளர்களையும் நிய மிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துவங்காத சாலை பணிக்கு அறிவிப்பு பலகை

பொதுமக்கள் அதிர்ச்சி திருவில்லிபுத்தூர், மே 23- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட கொத்தங்குளம் ஊராட்சியில் வன்னியம்பட்டி முதல் அர சியார்பட்டி வரை சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் வழங்கப்பட்டிருந்தா லும், இதுவரை பணிகள் தொடங்கப்பட வில்லை. ஆனால், கடந்த மார்ச் 5-ஆம் தேதி பணி கள் தொடங்கியதாக அறிவிப்பு பலகை மட்டும் வைக்கப்பட்டிருப்பது பொதுமக் களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பணிகள் தொடங்காமல் தொடங்கி யதாக பலகை வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், வேலை செய்யாமல் பணம் பெற்றுக் கொள்ள முயற்சி நடக்கி றதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “மத்திய ஆசியா போர் காரணமாக தார் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பணி தாமதமாகியுள்ளது. விரைவில் பணி கள் தொடங்கப்படும்” என்றனர்.

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வைகை அணையில் களிமண், வண்டல்மண் இலவசம் தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, மே 23- விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண்களை வைகை அணையிலிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி வட்டங்களில் உள்ள வைகை அணை உபகோட்டம், வைகை அணை கட்டுப் பாட்டில் உள்ள ஆண்டிபட்டி வட்டத்தில் 3, பெரியகுளம் வட்டத்தில் 3 ஆக மொத்தம் 6 அரசு புறம்போக்கு வைகை அணை நீர்த்தேக்கத்தில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகிய வற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது (அரசாணை எண்.14, இயற்கை வளங் கள் (எம்.எம்.சி.1) துறை, நாள்: 12.6.2024-ன்படி தேனி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண் 10. நாள்: 12.5.2026) மண்பாண்ட பயன்பாட்டிற்காக களிமண் எடுக்க வரப்பெறும் விண்ணப்பங்களில் உண்மைத்தன்மை குறித்து சம்gந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று, இருப்பிடச்சான்று ஆகியன சரிபார்த்து, வைகை அணை நீர்த்தேக்கத்தில் இலவசமாக எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந் தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்.

முகப்பு விளக்கு இல்லாமல் இருட்டில் வந்த அரசு பேருந்து

ஒட்டன்சத்திரம், மே 23- இரவில் விளக்குகளே இல்லாமல் எரியோடு அருகே உள்ள மாரம்பாடி வழியாக வேடசந்தூர் வந்த அரசு பேருந்தால் பயணிகள் அச்சம் அடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூருக்கு அரசு பேருந்து வெள்ளியன்று இரவு புறப்பட்டு வந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தாடிக்கொம்பை கடந்து எரியோடு அருகே உள்ள மாரம்படிக்கு வந்தபோது திடீரென்று பாதி வழியில் முகப்பு விளக்குகள் மற்றும் பேருந்துக்குள் இருந்த விளக்கு களும் பழுது ஏற்பட்டு எரியவில்லை. அதே நிலையில் மல்வார்பட்டி வழியாக வேடசந்தூர் வந்தது. செல்போன் விளக்கு வெளிச்சத்தில் நடத்துனர் பயணி களுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டே வந்தார். ஓட்டுநர் நிதானத்தோடு சிரமப்பட்டு அரசு பேருந்தை மிகவும் மெது வாக ஓட்டிக் கொண்டே வந்தார். இந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அச்சத்தோடு பயணம் செய்த னர். இந்த அரசு பேருந்தில் பேட்டரிகள் சார்ஜ் இல்லாமல் பழுது ஏற்பட்டு இருந்ததை வேடசந்தூர் பணிமனையில் யாரும் கவனிக்காத நிலையில் இரவு நேரத்தில் முகப்பு வெளிச்சம் எரியவில்லை என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பைக் மோதி முதியவர் படுகாயம்

நத்தம்,மே 23- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி யைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(68). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக நத்தம்- திண்டுக் கல் சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் திண்டுக்கல் நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் ஓட்டிச் சென்ற பைக், முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகத்திற்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் தேனியில் 27 ஆம் தேதி நடக்கிறது

தேனி, மே 23- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27 ஆம் தேதி நடைபெற வுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.5.2026 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணி முதல் நடை பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகி கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெற லாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளி அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம்-1 ஆகிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூல மாகவோ விண்ணப்பிக்கலாம்.