குடிநீர் கேட்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமத்துவபுரம் பொதுமக்கள்
14 Jul 2026, 10:00 pm
<p><strong>குடிநீர் கேட்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமத்துவபுரம் பொதுமக்கள்</strong></p><p>விருதுநகர், ஜூலை 14- விருதுநகர் அருகே யுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் அருகே யுள்ளது செங்கோட்டை சமத்துவபுரம். இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் குடிநீர் விநியோ கம் முற்றிலுமாக நிறுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வா கத்திடம் பலமுறை தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக் கள், குடிநீர் வழங்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகை யிட்டனர். இதுகுறித்து பொதுமக் கள் கூறுகையில், “எங்கள் பகுதிக்கு ஒரு மாதமாக குடி நீர் வழங்கவில்லை. இத னால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை க்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன் காரணமாக அன்றாட வருமானத்தில் பெரும் பகு தியை குடிநீருக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து பலமுறை உள் ளாட்சி அமைப்புகளிடம் புகார் அளித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, வேறு வழி யின்றி கடைசி முயற்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டுள் ளோம் எனத் தெரிவித்தனர். </p>
