தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகரில் சாலையோரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்திட கோரிக்கை

17 May 2026, 8:58 pm
விருதுநகரில் சாலையோரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்திட கோரிக்கை

விருதுநகரில் சாலையோரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்திட கோரிக்கை

விருதுநகர், ஏப்.17- விருதுநகரில் புதிய சிவகாசி சாலை யின் ஓரத்தில் ஆபத்தான முறையில் பொது மக்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரி பொருள் கட்டுப்பாட்டுத்துறை ஆக்சி ஜன் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றி ஏராளமான விதி முறைகளை கொடுத்துள்ளது.

அதில், சாலையில் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கையாள்வது அல்லது எடுத்துச் செல் வது மிகுந்த ஆபத்தானது எனவும், அதிக அழுத்தத்தில் இருக்கும் இந்த சிலிண்டர்கள் கசிவு ஏற்பட்டாலோ, கீழே விழுந்து உடைந்தாலோ அவை கடுமையான தீ விபத்துகளை ஏற்படுத்த லாம் எனவும், வெடித்துச் சிதறலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆக்ஸிஜன் தீப்பிடிக்காது என்றாலும், அருகில் சிறிய தீப்பொறி அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட அது மிகப்பெரிய தீயாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வெயிலில் சிலிண்டர் அதிக சூடானால் வெடிக்க வாய்ப்புள்ளது.

காற்றில் ஆக்ஸிஜன் அளவுக்கு அதிக மாகக் கலந்தால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரி வித்துள்ளது. எனவே, ஆக்ஸிஜன் சிலிண்டர் களை எப்போதும் நேராக மட்டுமே வைக்க வேண்டும்.

வாகனங்களில் கொண்டு செல்லும் போது சிலிண்டர் அசையா மல் கயிறுகளால் இறுக்கமாகக் கட்ட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆனால், விருதுநகரில் புதிய சிவ காசி சாலையின் ஓரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தரையில் வீசப்படு கின்றன.

எப்போதும் வாகனப் போக்கு வரத்து அதிகமுள்ள இச்சாலையின் ஓரத்தில் வெட்ட வெளியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடக்கின்றன. நிரம்பிய சிலிண்டர்கள் விதிகளை மீறி தரையில் போடப்பட்டுள்ளன.

இவற்றை பாது காப்பற்ற வாகனங்களில் ஏற்றி இறக் கும் பணியும் தினசரி நடைபெற்று வரு கிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களை பாது காப்பாக தனி குடோனில் வைத்திருக்க வேண்டுமென்ற விதிமுறைகளைக் கூட பின்பற்றுவதில்லை. மேலும், இந்த ஆக்சிஜன் சிலிண்டர் கள் கிடக்கும் இடத்தின் அருகிலேயே பெட்ரோல் பங்க் மற்றும் குடியிரு ப்புகள், சிறுதொழில் நிறுவனங்கள், தேநீர் கடை ஆகியவை உள்ளன.

சிறிய தீப்பொறி பட்டால் கூட இப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப் புள்ளது.

எனவே, விருதுநகரில் சிவகாசி சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத் தில் போடப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை உடனடியாக அப்பு றப்படுத்துவதோடு, இச்செயலில் ஈடு படுவோர் மீதும் அதற்குத் துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.