விருதுநகர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் பறிமுதல்
5 Jun 2026, 1:40 am
<p><strong>விருதுநகர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் பறிமுதல்</strong></p><p>விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் சார்பதிவாளர் அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் பணம் பறிமுதல் செய் யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. விருதுநகர் கச்சேரி சாலையில் அமைந்துள்ள பத்திரப் பதிவு அலுவல கத்தில், வாஸ்து நாளை முன்னிட்டு அதி களவில் பணப்பரிமாற்றம் மற்றும் முறை கேடுகள் நடைபெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தக வல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், சார்பதிவாளர் அலுவலகம்–2-ல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் வெளிக்கதவுகள் மூடப் பட்டு, வெளிநபர்கள் உள்ளே வருவதற்கும், உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்வ தற்கும் தடை விதிக்கப்பட்டது. சோதனை நடைபெற்றபோது சார்பதிவாளர் ஜின்னத் துல் பிர்தௌஸ் அலுவலகத்தில் இல்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள், ஆவண எழுத்தாளர்கள் மற் றும் அவர்களது உதவியாளர்களிடம் அதி காரிகள் விசாரணை நடத்தினர். அவர்களி டம் இருந்த ரொக்கப் பணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய கணக்குகள் மற்றும் ஆவணங்கள் இல்லாத ரூ.54 ஆயி ரம் பணம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கு விப ரங்களை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலு வலகத்தில் சமர்ப்பித்து விளக்கம் அளித்த பின்னர், அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்த னர். இந்த திடீர் சோதனை விருதுநகர் பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
