தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

14 Jun 2026, 11:34 pm
திருச்சி விரைவு செய்திகள்

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 14- விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ராமச்சந்திராபுரம் கிரா மத்தில், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்ப னைக்கு வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மதிவாணன் தலை மையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தர மகா லிங்கம் என்பவர் அரசு முத்திரை மற்றும் லேபிள் ஒட்டப் பட்ட மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சுந்தர மகாலிங் கத்தை கைது செய்து, அவரிடமிருந்து 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 2,460 வழக்குகளுக்கு தீர்வு

திருவில்லிபுத்தூர், ஜூன் 14- விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கந்தக்குமார் தலைமையில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கொன்றில், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில் சம ரசத் தீர்வு எட்டப்பட்டது. அதற்கான தீர்வு நகல் உடனடி யாக வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் சிவில், குற்றவியல், மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி வாராக் கடன் மற்றும் சிறு வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 5,875 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 2,460 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, மொத்தமாக ரூ.6 கோடியே 28 லட்சத்து 93 ஆயிரத்து 470 மதிப்பிலான தொகைக்கு உத்தரவிடப்பட்டது. நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அர சுத்துறை அலுவலர்கள், அரசு மருத்துவர்கள், வங்கி மேலா ளர்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

108 ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கு ஜூன் 17-ஆம் தேதி ஆட்கள் தேர்வு

விருதுநகர், ஜூன் 14- தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 108 ஆம்பு லன்ஸ் சேவையில் காலியாக உள்ள அவசரகால மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு, ஜூன் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. அவசரகால மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற் கான கல்வித் தகுதியாக பி.எஸ்.சி. நர்சிங், ஏ.என்.எம்., ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., பார்மசி, பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி, விலங்கியல், தாவரவியல், பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி மற்றும் பிளாண்ட் பயாலஜி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 19 முதல் 30 வய துக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,320 வரை ஊதியம் வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 162.5 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். வயது வரம்பு 24 முதல் 35 வயதுக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவமும், பேட்ஜ் உரிமத்துடன் குறைந்தது ஓராண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இப் பணிக்கு மாதம் ரூ.21,120 ஊதியம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவ ணங்களுடன் நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89259 41259 மற்றும் 73977 24824 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூரில் மின்தடையை சீரமைத்திடுக! அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

இராமநாதபுரம், ஜூன் 14- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் முதுகுளத்தூர் வட்ட பேரவை கூட்டம், முது குளத்தூர் பேரூராட்சி அலுவ லக வளாகத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் என்.வீரபத்திரன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் பி.ராம சாமி வரவேற்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் பி.எஸ்.விஜயராகவன் தொடக்க உரையாற்றினார். வட்டச் செயலாளர் எச்.ஹாஜா நஜ்முதீன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். நீ.ராமகிருஷ்ணன் (முது கலை ஆசிரியர் - ஓய்வு) மற் றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பிச்சை ஆகி யோர் வாழ்த்துரையாற்றி னர். மாவட்டத் துணைத் தலைவர் கே.சிவனுபூவன் நிறைவுரையாற்றினார். என். பாலகிருஷ்ணன் (காவல் துறை ஓய்வு) நன்றி கூறினார். பழைய ஓய்வூதியத் திட் டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர் கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கான மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. மேலும், முதுகுளத்தூர் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளை சீரமைத்து, மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப் பட்ட துறையினர் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டது.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் திருவில்லிபுத்தூரில் கையெழுத்து இயக்கம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 14- விருதுநகர் மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கந்தக் குமார் உத்தரவின்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் குழந்தை தொழிலா ளர் எதிர்ப்பு நாள் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி திருவில்லி புத்தூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறை பணியாளர்கள், பொதுமக் கள் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான டி. பிச்சைராஜன், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழி ப்புணர்வு பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலா ளர் நலத்துறையைச் சேர்ந்த தொழிலாளர் உதவி ஆய்வா ளர்கள் பிச்சைக்கனி, ரஞ்சி தம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் சாந்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திருவில்லிபுத்தூரில் இலவச மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 14- திருவில்லிபுத்தூர் கிரீன் சிட்டி ரோட்டரி கிளப், நாடார் உறவின்முறை, இராஜபாளை யம் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ மனை மற்றும் சிவகாசி அனில் குமார் கண் மருத்துவமனை இணைந்து திருவில்லிபுத்தூ ரில் இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாமை நடத்தின. முகாமிற்கு மாவட்ட ஆளு நர் சண்முக நடராஜ் தலைமை தாங்கினார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் துவக்கி வைத்தார். முகாமில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையின் மருத்து வர்கள் அனுசுயா, வினோ லியா, தேவகுமாரி தலைமை யிலான குழுவினர் ரத்த அழுத் தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வற்றிற்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதே போல் சிவகாசி கண் மருத்துவர் அனில்குமார் தலைமையில் கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது. திரு வில்லிபுத்தூர் டவுன் நாடார் உறவின்முறை தலைவர் பி.கே.எஸ்.ஆர்.ஞானம், ரோட்டரி துணை ஆளுநர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடு களை ரோட்டரி கிளப் தலை வர் கருப்பசாமி, செயலாளர் ராஜபாண்டியன், பொருளா ளர் ராஜேஷ் கனி உள் ளிட்டோர் செய்திருந்தனர்.

பழனி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

பழனி, ஜூன் 14- பழனி பேருந்து நிலைய வளாகத்திற்குள் அனுமதி யின்றி வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பழனி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத் துள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராள மான பக்தர்கள் வருகை தருவதால், பழனி பேருந்து நிலையம் முக்கிய போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 700க்கும் மேற்பட்ட பேருந்து கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில இருசக்கர வாகன ஓட்டிகள், கடை ஊழியர்கள், சந்தைக்கு வருபவர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் ஆகியோர், வாகன நிறுத்தத்திற் காக ஒதுக்கப்பட்ட இடங்களை பயன்படுத்தாமல், பயணி கள் நடைமேடைகள் மற்றும் பேருந்து நிலைய வளா கத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வரு வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பயணிகள் காத்திருக்கும் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதோடு, அவர்களின் நடமாட்டமும் பாதிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, பேருந்து நிலைய வளாகம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்து மிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து நிலைய நடைமேடைகள் மற்றும் பயணி கள் பயன்பாட்டிற்கான பகுதிகளில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்து, அவற்றை உடனடியாக பறிமுதல் செய்யும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

15 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர், ஜூன் 14- விருதுநகரில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் முத்துத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமா ரின் மகள், அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் உணவருந்திய அவர், பின்னர் வீட்டின் மாடிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மாடியில் துப்பட்டா வால் தூக்கிட்ட நிலையில் மாணவி இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இந்தச் சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி அருகே மூதாட்டியிடம் தங்க செயின் திருட்டு

தேனி, ஜூன் 14- போடி அருகே மூதாட்டியிடம் தங்க செயின் திருடிய நபர்கள் குறித்து போலீசார் சனிக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (68). இவர் உடல்நலமில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவ ருக்குச் சொந்தமாக 3 பவுன் தங்க நகையை தலை யணைக்கு அடியில் வைத்திருந்தாராம். உடலநலம் விசாரிக்க வந்த உறவினர்கள் தங்க நகை யை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண்களை கிண்டல் செய்த 3 பேரை விரட்டிப் பிடித்த சிங்கப் பெண் படையினர்

சிவகாசி, ஜூன் 14- சிவகாசியில் தெருவில் நடந்து சென்ற பெண்களை கேலி செய்து தொந்தரவு அளித்ததாக கூறப்படும் 3 பேரை சிங்கப் பெண் சிறப்பு காவல் படையினர் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிவகாசி ஏ.வி.டி. தெரு பகுதியில் சிலர் பெண்களை கிண்டல் செய்து வருவ தாக சிங்கப் பெண் படையின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்படை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிங்கப் பெண் படையின ரின் வாகனத்தை கண்டதும் அங்கு இருந்த 3 பேர் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப் படுகிறது. அவர்களை தெருக்களில் விரட்டிச் சென்ற படையினர், மூவரை யும் பிடித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தனர். பின்னர் காவல்துறை யினர் நடத்திய விசாரணை யில், அவர்கள் சிவகாசி யைச் சேர்ந்த மகேந்திர குமார் என்ற குல்லமணி (26), செண்பகபாண்டி (25) மற்றும் மகேந்திரன் (27) என்பது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட மூவ ரும் ஏற்கனவே காவல்துறை யின் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 14- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரியும் அலு வலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விதிகளின்படி, ஒரு அலுவலர் ஒரே அலு வலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணி புரியக் கூடாது. அதன்பிறகு அவர் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட சில அரசு அலுவ லகங்களில், குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜ பாளையம் பகுதிகளில், சில அலுவலர்கள் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒரே இடத்தில் பணி யாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஒரே அலுவலகத்தில் நீண்டகாலம் பணிபுரி வது நிர்வாக வெளிப்படைத்தன்மை குறைவதற்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலுக்கு வாய்ப்பளிப்ப தற்கும் காரணமாக அமையலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதேவேளை, பல்வேறு துறை களில் பணியாற்றும் அலுவலர்கள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படு வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, காவல்துறையில் சிறிய புகார் எழுந்தால்கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட னடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், அதே நடைமுறை சில துறைகளில் பின்பற்றப் படாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் 3 ஆண்டு களுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களின் விப ரங்களை ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், பேருந்து உரிமை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விருதுநகர் சந்தையில் பருப்பு வகைகள், கடலை எண்ணெய் விலை குறைவு

குண்டூர் வத்தல் விலை உயர்வு

விருதுநகர், ஜூன் 14- விருதுநகர் சந்தையில் இந்த வாரம் கடலை எண் ணெய், பாமாயில் மற்றும் பருப்பு வகைகளின் விலை சற்று குறைந்துள்ள நிலை யில், குண்டூர் வத்தல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாரந்தோறும் வெளி யிடப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியலின்படி, 15 கிலோ கொண்ட கடலை எண்ணெய் டின் கடந்த வாரம் ரூ.3,300-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ. 50 குறைந்து ரூ.3,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 15 கிலோ பாமாயில் டின் கடந்த வாரம் ரூ.2,385-க்கு விற்ற நிலை யில், இந்த வாரம் ரூ.35 குறைந்து ரூ.2,350-க்கு விற்ப னையாகிறது. குண்டூர் வத்தல் (ஏசி ரகம்) 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து குறைந்ததால், குவிண்டா லுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை உயர்ந்து, தற்போது ரூ.24 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.11,400 முதல் ரூ.11,800 வரை விற்பனையான நிலை யில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.11,300 முதல் ரூ.11,700 வரை விற்பனை செய்யப்படுகிறது. நயம் லையன் ரக துவ ரம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.10,700 முதல் ரூ.11,000 வரை விற்ற நிலை யில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.10,600 முதல் ரூ.10,800 வரை விற்பனை யாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ரகம்) 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.10,400 முதல் ரூ.10,600 வரை விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.10,300 முதல் ரூ.10,500 வரை விற்பனை செய்யப்படு கிறது. உருட்டு உளுந்து (எப்.ஏ.க்யூ. ரகம்) கடந்த வாரத்தை விட ரூ.100 குறைந்து, தற்போது 100 கிலோ மூட்டை ரூ.8,200-க்கு விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,900-க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ. 100 குறைந்து ரூ.9,800-க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதற்கிடையில், நல் லெண்ணெய், மல்லி மற்றும் காபி உள்ளிட்ட பிற அத்தியா வசிய உணவுப் பொருட்க ளின் விலையில் எந்த மாற்ற மும் இல்லை. கடந்த வார விலையே இந்த வாரமும் நீடித்து வருவதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.