தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் வாகனக் காப்பகத்தில் தீ விபத்து 7 சொகுசு கார்கள் உள்பட 8 வாகனங்கள் சேதம்

1 Nov 2026, 10:25 pm
தனியார் வாகனக் காப்பகத்தில் தீ விபத்து 7 சொகுசு கார்கள் உள்பட 8 வாகனங்கள் சேதம்

தனியார் வாகனக் காப்பகத்தில் தீ விபத்து 7 சொகுசு கார்கள் உள்பட 8 வாகனங்கள் சேதம்

விருதுநகர், நவ.1-விருதுநகரில் தனியார் வாகனக் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 சொகுசு கார்கள் உள்பட 8 வாகனங் கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.விருதுநகர் நாராயணமடம் தெருவில் ரவீந்திரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் வாகனக் காப்பகம்செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்தவாகனங்களில் தீ பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 7 சொகுசு கார்கள் மற் றும் ஒரு சரக்கு வாகனம் என மொத் தம் 8 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனக் காப்பகங்கள்

விருதுநகரில் தனியார் வாகனக் காப்பகங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. காப்பகத்தின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் தீயணைப்பான்கள், தானியங்கி நீர்த் தெளிப்பான்கள், தீ விபத்து எச்சரிக்கை மணிகள் ஆகியவை செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

, தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லத் தனிப் பாதை, அவசரக் காலங்களில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான தடையற்றவழிகள், பயிற்சி பெற்ற பாதுகாப்பு ஊழியர்கள் ஆகிய வசதிகளும் அவசியம். ஆனால், பல காப்பகங்களில் நுழைவுவாயில் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதாகவும், போதிய பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வாகனங்களுக்குத் தனித்தனியாக மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கும் காப்பகங்கள், அதற்கேற்ப பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை எனவும் புகார் தெரிவிக்கப் படுகிறது.

எனவே, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் வாகனக் காப்பகங்களில் தீத்தடுப்புக் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால வெளியேற்றப் பாதைகள், பயிற்சி பெற்ற பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.