பாறைப்பட்டியில் உள்ள 20 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிடுக!
1 Jun 2026, 10:36 pm
<p><strong>பாறைப்பட்டியில் உள்ள 20 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிடுக!</strong></p><p>விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் விருதுநகர், ஜூன் 1- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை ஒன்றியம், பாறைப்பட்டி கிரா மத்தில் உள்ள 20 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சிய ரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேரில் வலியுறுத்தினர். வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது பாறைப்பட்டி கிராமம். இங்கு 20 குடும்பத்தினர் வீடுகளைக் கட்டி குடி யிருந்து வருகிறோம். இந்த நிலையில் தனி நபர் ஒருவர், வீடுகள் ஊரணி புறம்போக்கில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்து வீடுகளை இடிப்பதற்கும் உத்தரவு வாங்கினார். எனவே, வீடுகளை இடிக்க நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே இக்கிராமத்தில் 2 முறை நில சர்வே பணிகள் நடைபெற்றது. இதில், ஊரணியைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அப்போது 20 வீடுகளை மட்டும் தவறாக அளவீடு செய்து காளியம்மன் கோவில் ஊரணி சர்வேயில் உள்ளதாக இணைத்துள் ளனர். மழைக் காலங்களில் எங்களது குடி யிருப்பில் நீர் தேங்கி சேதம் ஏதும் ஏற்படு வதில்லை. மேலும் எங்களது குடியிருப்பு பகுதியினால் ஊரணியின் நீர்வரத்திற்கோ மற்றும் நீர் சேமிப்பிற்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும், கிராம வரைபடத்தில் “காளி யம்மன் கோவில், ஊரணி” என்ற வகைப் பாடு உள்ள நிலையில் இதர பதிவேடு களில் “ஊரணி” என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கிராம வரை படத்தில் உள்ளவாறு யுடிஆர் மற்றும் “அ” பதிவேடு மற்றும் இதர வருவாய்த்துறை ஆவணங்களில் காளியம்மன் கோவில் மற்றும் ஊரணி என வகைப்பாடு மாற்றம் செய்யவும், எங்களது குடியிருப்பு பகுதிகளை அகற்றவும் தடைவிதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ், வெம்பக்கோட்டை சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே.கண்ணன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.</p>
