புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை, மின் விளக்கு, வாகன காப்பக வசதிகளை மேம்படுத்த வேண்டும்
yesterday

புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை, மின் விளக்கு, வாகன காப்பக வசதிகளை மேம்படுத்த வேண்டும்

சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூன் 22- விருதுநகர் புதிய பேருந்து நிலை யத்தில் கழிப்பறை, மின் விளக்கு, வாகன காப்பகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகர் புதிய பேருந்து நிலையம் கடந்த 2024 ஆகஸ்ட் 21 முதல் செயல் பட்டு வருகிறது. பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பயணி கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வரு கின்றனர். குறிப்பாக, வெளியூரிலிருந்து வரும் ஆண் பயணிகள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலையும், பெண் பயணி கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடி யாமல் அவதிப்படும் நிலையும் ஏற்பட்டுள் ளது. எனவே, கழிப்பறைகளை தினசரி சுத் தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது சிறிய அளவிலான இருசக்கர வாகன நிறுத்துமிடம் மட்டுமே உள்ளதால், ஏராளமான வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்படுகின்றன. இத னால், பெரிய அளவிலான வாகன காப்ப கத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் திருட்டு உள் ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதேபோல், இரவு நேரங்களில் பயணிகளின் பாது காப்பை உறுதி செய்ய போதுமான மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் நக ராட்சிக்கு சொந்தமான கடைகள் குறை வாக உள்ளதால் தற்காலிக கடைகள் அதி கரித்துள்ளன. சில இடங்களில் தனிநபர்கள் வாடகை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நகராட்சி சார்பில் புதிய கடைகள் கட்டப்பட்டு முறையான வாடகை முறையில் ஒதுக்கீடு செய்யப் பட்டால் நகராட்சிக்கும் கூடுதல் வரு வாய் கிடைக்கும் என மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து சிபிஎம் நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், நகரக்குழு உறுப்பினர் பி.ராஜா, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஆனந்தகண்ணன், கிளைச் செய லாளர் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் எம்.பெருமாள்சாமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மனுவை வழங்கினர்.