தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

17 Jul 2026, 9:46 pm
திருச்சி விரைவு செய்திகள்

காரியாபட்டி அருகே பெண்ணை கழுத்தறுத்து கொன்றவர் கைது

காரியாபட்டி, ஜூலை 17- காரியாபட்டி அருகே வீட்டில் இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது கீழ அழகிய நல்லூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் மயில் (31). இவர் கடந்த ஜூலை 16 மாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (32) என்பவரைக் கைது செய்தனர். மயிலுக்கும் உதயகுமாருக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் அவர் வேறொரு நபருடன் பேசுவதை உதயகுமார் கண்டித்தாராம். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உதயகுமார், மயிலின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தடை செய்த புகையிலை பொருள் விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூலை 17- விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டி பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உதயசூரியன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார. அப் போது நத்தம் பட்டி கண்மாய் அருகில் அதே ஊரைச் சேர்ந்த தாமஸ் என்பவர் அரசு அனுமதியின்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தாமஸிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புல்லாவெளி அருவியை மேம்படுத்த நில அளவைப் பணிகள் தொடக்கம்

சின்னாளப்பட்டி ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை அருகே அமைந்துள்ள புல்லாவெளி அருவியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாதுறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புல்லாவெளி அருவி கன்னிவாடி வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது என்று கூறி பணி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலாத்துறை, வருவாய்துறை, வனத்துறை இணைந்து நில அளவை பணி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஆத்தூர் வட்டாட்சியர், சுரேஸ்குமார், கன்னிவாடி வனச்சரகர் குமரேசன், நில அளவர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நில அளவை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம்

சிவகங்கை, ஜூலை 17- சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உடற்திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்டப் பிரிவு சார்பில் அமைக் கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட திறந்த வெளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கலந்து கொண்டு நவீன உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, உடற்பயிற்சி கூடத்தில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு நவீன கருவிகளை பார்வையிட்டு அவற்றின் பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நவீன உடற்பயிற்சி கூடத்தில் அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது உடற்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட அலுவலர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இஸ்ரோவை தனியார்மயமாக்குவதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ப.மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

விருதுநகர், ஜூலை.17- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருவதால் நாட்டின் பாதுகாப்பு கடும் கேள்விக்குறியாகி வரு கிறது என்று விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டினார். விருதுநகரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக ளில் பயிலும் 10, 11 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவி யருக்கு விருது வழங்கும் விழா நடை பெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு செய்தி யாளர்களை சந்தித்த ப.மாணிக்கம்தாகூர் கூறியதாவது : “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான மற்றும் சென்சிடிவ் வான தரவுகள் கசிந்து, ‘டார்க் வெப்’ இணையதளத்தில் பரவி வருவது அதிர்ச்சி யை அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான, தேசியப் பாதுகாப்பு மீறலாகும். நாட்டின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் எங்கே போனதென்று தெரியவில்லை. அரசிடம் இருக்க வேண்டிய முக்கியத் துறைகளை ரிலையன்ஸ் போன்ற கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் போதே இந்த ஆபத்து தொடங்கிவிட்டது. மோடி அரசின் இந்த மெத்தனப் போக்கால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள் ளேன். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும். ஒன்றிய பாஜக அரசானது இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளைத் தனியார்மயமாக்கத் துடிப்பதால், நாட்டின் பாதுகாப்புப் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இஸ்ரோ உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாகும். 100க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள் வெளியேறி வரு வது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. நேரடியாகப் பிரதமரின் கட்டுப்பாட்டில் வரும் இந்தத் துறை குறித்து, நாடாளு மன்றத்தில் கேபினட் அமைச்சரும் பிரத மரும் உரிய விளக்கமளிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த வொரு போராட்டமும் நடத்தக் கூடாது, கேள்விகள் கேட்கக் கூடாது என பள்ளி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது போல் மோடி அரசு முயல்கிறது. இது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதி ரானது. மக்கள் எங்களை தில்லிக்கு பிரச்ச னைகளைப் பேசத்தான் அனுப்பி யுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.