தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

16 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

29 Jun 2026, 11:10 pm
16 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

16 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விருதுநகர், ஜூன் 29- விருதுநகர் நகராட்சியின் 3-வது வார்டில் கடந்த 16 நாட்களாக குடிநீர் வழங்கப்படா ததை கண்டித்து, வார்டு கவுன்சிலர் தலை மையில் பொதுமக்கள் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். 3-வது வார்டுக்கு உட்பட்ட படேல் ரோடு, வாணிபக் கழக குடோன் சாலை, முத்தம் மாள் சாலை மற்றும் ஏ.ஏ. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இப் பகுதிகளுக்கு வழக்கமாக 5 முதல் 7 நாட்க ளுக்கு ஒருமுறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந்தது. இந்நிலையில், மல்லாங்கிணறு சாலை யில் நடைபெற்று வரும் வடிகால் பணி யின்போது பிரதான குடிநீர் குழாய் சேத மடைந்ததாக கூறப்படுகிறது. 16 நாட்கள் கடந்தும் குழாய் சீரமைக்கப்படாததால், அப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக் கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தனி யார் டேங்கர் லாரிகள் மூலம் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், வார்டு கவுன்சிலர் வெங்கடேஷ் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையா ளர் விஜயகுமார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஓரிரு நாட்களுக்குள் குடிநீர் விநியோகத்தை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.