தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய சாலைகளை சீரமைக்கவில்லை

30 Oct 2026, 10:19 pm
விருதுநகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய சாலைகளை சீரமைக்கவில்லை

விருதுநகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய சாலைகளை சீரமைக்கவில்லை நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி புகார்

விருதுநகர், அக்.30-விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவில்லை என்று நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.விருதுநகர் நகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், துணைத் தலைவர் தனலெட்சுமி, பொறியாளர் இர்வின் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு :கூட்டம் துவங்கியதும், நவம்பர் 15 முதல் தனியார் ஒப்பந்தகாரர் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக நகர வாழ்வாதார மையம் மூலம் திடக் கழிவு மேலாண்மை பணிகள் நடைபெறும் என அரசு உத்தரவு வந்துள்ளது. அதுகுறித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சுகாதார அலுவலர் பழனிசாமிபதிலளித்தார்.

தனது வார்டு பகுதியில் சாலைகளை சீரமைக்கும் பணிக்காக தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஆறுமுகம் நன்றி தெரிவித்ததோடு, விரைவில் டெண்டர் வைத்து பணிகளைமுடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து உறுப்பினர்கள் சரவணன், கலையரசன், உமாராணி, மைக்கேல்ராஜ் ஆகியோர் தங்களது வார்டுகளில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

கருப்பு பட்டியலில் ஒப்பந்ததாரர்

அதற்கு பதிலளித்த பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தகாரர்தான் இப்பணியை செய்ய வேண்டும். ஆனால், பல ஊர்களில் இப்பணி நடைபெறவில்லை. இதனால் அவரைகருப்பு பட்டியலில் வைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. பொது நிதி அதிகமாக இருந்தால் நகராட்சி சார்பில் சாலைகளை சீரமைக்கலாம் என்றார்.மழை நீர் வடிகால்களில் ஏராளமான வண்டல்மண் தேங்கியுள்ளது. அதை அகற்றாத காரணத்தால் தர்காஸ் தெரு, மொன்னி தெரு ஆகியவற்றில்உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது. எனவே, மண்ணை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறுப்பினர்கள் பசீர்அகமது உள்ளிட்டோர் தெரிவித்தனர்.அதற்கு பதிலளித்த சுகாதார அலுவலர், மழை நீர் வடிகால் மேல் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்றினால்தண்ணீர் சீராக செல்லும் என்றார். மேலும் மண் அள்ள டெண்டர் விடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைவர்தெரிவித்தார்.

நகரின் முக்கியச் சாலையாக உள்ள இரயில்வே பீடர் சாலை, வடக்கு ரதவீதி, தேசபந்து மைதானம், மேற்குரதவீதி, மெயின் பஜார், உள் தெரு, பாவாலி சாலை, புல்லலக்கோட்டை சாலை ஆகியவற்றில் வாகனங்கள், பொது மக்கள் செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதைஅகற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் முத்துலட்சுமி, உமாராணி, சுல்தான் அலாவூதீன் ஆகியோர் தெரிவிததனர்.

தீபாவளிக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம்

தீபாவளிப் பண்டிகை முடிந்தவுடன் முறையான அறிவிப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்.அப்போது உறுப்பினர்கள் இடையூறு செய்யக் கூடாது என நகரமைப்பு அலுவலர் மற்றும் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தனர்.

கச்சேரி சாலையில் உள்ள லாரிகள் பார உந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நகராட்சிக்கு சொந்தமான இடத்தை பாதுகாக்க வேண்டுமென உறுப்பினர்கள் ஜெயக்குமார்,கலையரசன் ஆகியோர் தெரிவித்தனர்.

மீனாம்பிகை பங்களா அருகில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க ஏற்கனவே கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு தடையில்லா சான்று கிடைக்கவில்லை. எனவே, மின்வாரிய அலுவலகம் அருகே அதை மாற்றிட கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்ய வேண்டுமென உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், கலையரசன், சரவணன், மைக்கேல்ராஜ் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.அதற்கு பதிலளித்த தலைவர், சைக்கிள் நிறுத்துமிடம் தான் வருகிறது என்றார்.

நகராட்சிக்கு நிதி இழப்பு

ஏற்கனவே, பழைய பேருந்து நிலையம் எதிரே புதிய வாகன காப்பகம் நகராட்சி சார்பில் பலகோடிரூபாயில் கட்டப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்குநிதி இழப்பு ஏற்படும். எனவே, தீர்மானத்தை இரத்துசெய்ய வேண்டுமென அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். தலைவர் ஆலோசனை செய்வதாக தெரிவித்தார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இவ்வாறாக விவாதம் நடைபெற்றது. மொத்தம்26 தீர்மானங்களில் 25 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.