தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய பொருட்களை அகற்றாத நகராட்சி பள்ளிக்குள் பாம்புகள் புகும் அபாயம்; பெற்றோர் அச்சம்

25 Jun 2026, 11:17 pm
பழைய பொருட்களை அகற்றாத நகராட்சி பள்ளிக்குள் பாம்புகள் புகும் அபாயம்; பெற்றோர் அச்சம்
<p><strong>பழைய பொருட்களை அகற்றாத நகராட்சி பள்ளிக்குள் பாம்புகள் புகும் அபாயம்; பெற்றோர் அச்சம்</strong></p><p>விருதுநகர், ஜூன் 25- விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளா கத்தில் பல ஆண்டுகளாக பழைய பொருட் கள் குவிந்து கிடப்பதால், அங்கு பாம்பு கள் அதிகமாக வசித்து வருவதாகவும், அவை அருகிலுள்ள அரசு பள்ளிக்குள் புகும் அபாயம் இருப்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் நக ராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி வளாகம் அமைந்துள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த வளாகத்தில் உடைந்த பிளாஸ்டிக் தொட்டிகள், இரும்புக் குழாய்கள், மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்ட ஏராளமான பழைய பொருட்கள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்த பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வளாகத்தை ஒட்டியே அ.ச.ப. சி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. எல்.கே.ஜி. முதல் 10-ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்தப் பள்ளி யில் சுமார் 400 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திலிருந்து வெளியேறும் பாம்பு கள் அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் வரு வதாகவும், இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகி பொ.ஆரோக்கி யராஜ் கூறுகையில், “இந்தப் பள்ளியில் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. உடனடியாக ஆசிரியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வந்து பாம்பை பிடித்து சென்றனர். எனவே, நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் குவிந்து கிடக்கும் பழைய பொருட்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்” என்றார். மேலும், நகராட்சிக்கு சொந்தமான பல வளாகங்களில் பழைய வாகனங்கள் மற்றும் பயன்பாடற்ற பொருட்கள் அதிக அளவில் தேங்கி கிடப்பதாகவும், அவற்றை கணக்கெடுத்து ஏலத்தில் விடுவதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் ஈட்ட முடியும் என நகர்மன்ற கூட்டங்களில் உறுப்பினர் கள் பலமுறை வலியுறுத்தியிருந்தாலும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகராட்சி வளா கங்களில் குவிந்து கிடக்கும் பழைய பொருட்களை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.