தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகரில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அமைச்சர் கீர்த்தனா தகவல்

16 May 2026, 11:23 pm
விருதுநகரில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அமைச்சர் கீர்த்தனா தகவல்
<p><strong>விருதுநகரில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அமைச்சர் கீர்த்தனா தகவல்</strong></p><p>விருதுநகர்,மே 16- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறி த்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் கீர்த்தனா கூறிய தாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘முன்னேற விழை யும் மாவட்டங்களின் பட்டிய லில் நமது விருதுநகர் மாவட் டம் இருந்தது. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் பல்வேறு குறி யீடுகளில் முன்னிலையை எட்டியுள்ளது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம் உள் ளிட்ட பணிகளுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தாமிரபரணி கூட் டுக் குடிநீர் திட்டத்தினை முழு மையாக செயல்படுத்த தேவையான உள்கட்ட மைப்புப் பணிகளை விரை ந்து முடிக்க வேண்டும். இளைஞர்களின் விளை யாட்டுத் திறனை ஊக்குவிக் கும் வகையில், நவீன விளை யாட்டு அரங்கம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும். மேலும், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தேவை யான அனைத்து முன்னெச்ச ரிக்கை மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகளை சுகாதாரத் துறையினர் தொய்வின்றி செய்ய வேண்டும் எனத் தெரி வித்தார். இதில், மாவட்ட வரு வாய் அலுவலர் ஆனந்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நெடுஞ்சாலை நில எடுப்பு) ராஜசேகரன் உட் பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.