தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.1.34 கோடியில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சாலை குண்டும் குழியுமாக மாறியது! 8 மாதங்களுக்குள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி; விபத்து அபாயம்

28 Oct 2026, 9:31 pm
ரூ.1.34 கோடியில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சாலை குண்டும் குழியுமாக மாறியது! 8 மாதங்களுக்குள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி; விபத்து அபாயம்

ரூ.1.34 கோடியில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சாலை குண்டும் குழியுமாக மாறியது! 8 மாதங்களுக்குள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி; விபத்து அபாயம்

விருதுநகர், அக்.28-விருதுநகரில் ரூ.1.34 கோடியில் புதுப் பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சாலை, பணிகள் முடிந்து சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகரின் முக்கியச் சாலைகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். சாலை, நான்கு வழிச் சாலையையும் சாத்தூர் சாலையையும் இணைக்கிறது. இதனால், வெளியூர்களில் இருந்து நான்கு வழிச்சாலைவழியாக

விருதுநகருக்குள் வரும் கனரக வாகனங்களும், இங்கிருந்து வெளியூர்களுக்குச் செல் லும் வாகனங்களும் இந்தச் சாலையைப் பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, மதுரை–கோவில்பட்டி,கோவில்பட்டி–மதுரை, இராஜபாளையம்–விருதுநகர், சிவகாசி–மதுரை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்பேருந்துகள் நான்கு வழிச்சாலையிலிருந்து எம்.ஜி.ஆர். சாலை வழியாகப் புதிய பேருந்து நிலையத்துக் குச் சென்று வருகின்றன. இதனால், இச் சாலையில் போக்குவரத்துஅதிகரித்துள்ளது.இதையடுத்து, விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். சாலையை விரிவுபடுத்தி,புதுப்பிப்பதுடன், சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைத்து மின் விளக்குகள் பொருத்துவதற்காக ரூ.1.34 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தன.இந்நிலையில், விருதுநகர் மற்றும்சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால், புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாகக்காட்சியளிக்கிறது.

இதனால், அந்த வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் சில பள்ளங்களில் சிக்கிக் கொள்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளங்களால் விபத்தில் சிக்கிக் காயமடைவதாகக் கூறப்படுகிறது.எனவே, சேதமடைந்துள்ள எம்.ஜி.ஆர். சாலையை உடனடியாகச் சீரமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.