மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு
29 Oct 2026, 9:12 pm

மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு

விருதுநகர், அக்.29-விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி துணை முதல்வர் தேன் மொழி தலைமை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் ரமணி, துணை மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அரவிந்த்பாபு, வைஷ்ணவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் அமுதா ராணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், வெள்ளை அங்கி என்பது வெறும் உடை மட்டுமல்ல. நோயாளிகளிடம்கருணை, அக்கறை மற்றும் மனிதநேயத்துடன் செயல் பட்டு, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மருத்துவச் சேவையாற்றுவதற்கான உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்றார்.

மேலும், மருத்துவத் தொழிலில் பொறுப்புணர்வு, மனிதநேயம் மற்றும் மருத்துவ நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். தங்கள் வாழ்நாள் முழுவதும் இத்தகைய நல்ல பண்புகளைப் பின்பற்றி, அர்ப்பணிப்புடன் மருத்துவச் சேவையாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். பின்பு, மருத்துவ மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர் மன்றஉறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.