தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு! குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை அதிகரிப்பு கடலை எண்ணெய், மல்லி, துவரம் பருப்பு விலையும் உயர்வு

11 Oct 2026, 9:11 pm
விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்பு,  உருட்டு உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு! குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை அதிகரிப்பு கடலை எண்ணெய், மல்லி, துவரம் பருப்பு விலையும் உயர்வு

விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு! குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை அதிகரிப்பு கடலை எண்ணெய், மல்லி, துவரம் பருப்பு விலையும் உயர்வு

விருதுநகர், அக்.11-விருதுநகர் சந்தையில் ஒரே வாரத் தில் பாசிப் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.1,500 வரையும், உருட்டு உளுந் தம் பருப்பு விலை ரூ.1,100 வரையும் உயர்ந்துள்ளது. கடலை எண்ணெய், மல்லி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விருதுநகர் சந்தையில் இந்த வார விலை நிலவரப்படி, 15 கிலோ கடலை எண்ணெய் டின் ரூ.3,200-லிருந்து ரூ.3,300 ஆக உயர்ந்துள்ளது. மல்லி 40 கிலோ மூட்டை ரூ.6,800-லிருந்து ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. 100 கிலோ நயம் துவரம் பருப்பு ரூ.13,500 முதல் ரூ.13,800 வரையிலும், லயன் வகை ரூ.12,000 முதல் ரூ.12,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கிடுகிடு உயர்வு

உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.9,100–ரூ.9,200-லிருந்து ரூ.10,200–ரூ.10,400 ஆக உயர்ந்துள்ளது. தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,300–ரூ.9,500-லிருந்து ரூ.9,700–ரூ.9,900 ஆக அதிகரித்துள்ளது. பாசிப் பருப்பு ரூ.9,100–ரூ.9,300-லிருந்து ரூ.10,600–ரூ.11,000 ஆக உயர்ந்துள்ளது. பாசிப் பயறு விலையும் ரூ.700 வரை அதிகரித்து, தற்போது 100 கிலோ மூட்டை ரூ.8,500–ரூ.8,750-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், பாமாயில் விலை ரூ.20 குறைந்து, 15 கிலோ டின் ரூ.2,280 ஆக உள்ளது.

மக்கள் தலையில் ஏற்றப்படும் சுமை

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பருப்பு வகைகளின் விலை உயர்வு சிற்றுண்டி மற்றும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக் கத்தை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே தேநீர்க் கடைகளில் உளுந்த வடை ரூ.10 முதல் ரூ.15 வரை விற் பனை செய்யப்படும் நிலையில், இட்லி, தோசை, இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தலையில் இந்த சுமை ஏற்றப் படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

பதுக்குவோர் மீது நடவடிக்கை தேவை

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது சிரமமாக இருப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உணவுப் பொருட்களைப் பதுக்கி

செயற்கையான விலை உயர்வு ஏற் படுத்துவோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும், நியாயவிலைக் கடைகளில் கூடுதல் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.