தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருதுநகர் சந்தையில் வத்தல், உளுந்தம் பருப்பு விலை உயர்வு; துவரம் பருப்பு விலை சரிவு

5 Jul 2026, 9:24 pm
விருதுநகர் சந்தையில் வத்தல், உளுந்தம் பருப்பு விலை உயர்வு; துவரம் பருப்பு விலை சரிவு
<p><strong>விருதுநகர் சந்தையில் வத்தல், உளுந்தம் பருப்பு விலை உயர்வு; துவரம் பருப்பு விலை சரிவு</strong></p><p>விருதுநகர், ஜூலை 5- விருதுநகர் சந்தையில் வத்தல் மற்றும் உளுந்தம் பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், துவரம் பருப்பின் விலை சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வாராந்திர விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விப ரம் வருமாறு: வத்தல் (நாடு வகை): நாடு வகை வத்தல் சந்தைக்கு தொடர்ந்து வராததால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 100 கிலோ ரூ.18,000 முதல் ரூ.21,000 வரை விற்பனையான நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை உயர்ந்து, ஒரு மூட்டை ரூ.20,000 முதல் ரூ.24,000 வரை விற் பனையாகிறது. துவரம் பருப்பு (நயம் நாடு வகை): கடந்த வாரம் 100 கிலோ ரூ.11,200 முதல் ரூ.11,400 வரை விற்பனையானது. வெளிமாநிலங்களி லிருந்து அதிகளவில் வரத்து ஏற்பட்டுள்ள தால் குவிண்டாலுக்கு ரூ.200 வரை விலை குறைந்து, தற்போது ஒரு மூட்டை ரூ.11,000 முதல் ரூ.11,200 வரை விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு வகை): கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,500 முதல் ரூ.10,800 வரை விற்பனையான நிலையில், சந்தை வரத்து குறைந்ததால் குவிண்டா லுக்கு ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. தற்போது ரூ.10,800 முதல் ரூ.11,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு (பர்மா வகை): கடந்த வாரம் குவிண்டால் ரூ.8,400 ஆக இருந்த விலை, இந்த வாரம் ரூ.400 உயர்ந்து, ரூ.8,800 முதல் ரூ.9,000 வரை விற்பனை யாகிறது. தொலி உளுந்தம் பருப்பு (நாடு வகை): கடந்த வாரம் 100 கிலோ ரூ.9,700 வரை விற்ப னையான நிலையில், இந்த வாரம் குவிண்டா லுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.10,000 முதல் ரூ. 10,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடலைப் புண்ணாக்கு: 100 கிலோ ரூ.6,100 ஆக இருந்த விலை, இந்த வாரம் குவிண்டா லுக்கு ரூ.100 குறைந்து, ஒரு மூட்டை ரூ. 6,000-க்கு விற்பனையாகிறது. அதேவேளையில், பாசிப்பருப்பு, பாமா யில், கடலை எண்ணெய் மற்றும் நல் லெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.