விருதுநகர் சந்தையில் பாமாயில், குண்டூர் வத்தல் விலை சரிவு கடலை எண்ணெய், பருப்பு வகைகள் விலை உயர்வு
21 Jun 2026, 11:46 pm
<p><strong>விருதுநகர் சந்தையில் பாமாயில், குண்டூர் வத்தல் விலை சரிவு கடலை எண்ணெய், பருப்பு வகைகள் விலை உயர்வு</strong></p><p>விருதுநகர், ஜூன் 21- விருதுநகர் சந்தையில் இந்த வாரம் கடலை எண்ணெய் மற்றும் பருப்பு வகை களின் விலை உயர்ந்துள்ள நிலையில், பாமா யில் மற்றும் குண்டூர் வத்தலின் விலை சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வாராந்திர விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடலை எண்ணெய் 15 கிலோ டின் கடந்த வாரம் ரூ.3,250க்கு விற்பனையான நிலை யில், இந்த வாரம் ரூ.50 உயர்ந்து ரூ.3,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் 15 கிலோ டின் கடந்த வாரம் ரூ.2,350க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ. 10 குறைந்து ரூ.2,340க்கு விற்பனையாகிறது. குண்டூர் வத்தல் (ஏசி ரகம்) 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.24,000 முதல் ரூ. 26,000 வரை விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரண மாக குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை விலை குறைந்து, ரூ.22,000 முதல் ரூ.24,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.11,300 முதல் ரூ.11,700 வரை விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ. 11,400 முதல் ரூ.11,800 வரை விற்பனையாகி றது. நயம் லையன் ரக துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.10,600 முதல் ரூ.10,900 வரை விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.10,700 முதல் ரூ.11,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ரகம்) 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.10,300 முதல் ரூ.10,500 வரை விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.10,400 முதல் ரூ.10,600 வரை விற்பனையாகிறது. உருட்டு உளுந்து (எப்.ஏ.க்யூ. ரகம்) கடந்த வாரத்தை விட ரூ.100 உயர்ந்து, 100 கிலோ மூட்டை ரூ.8,300க்கு விற்பனை செய்யப்படு கிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,800க்கு விற்ற நிலை யில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ. 9,900க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,050 முதல் ரூ.9,200 வரை விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.9,150 முதல் ரூ.9,300 வரை விற்பனை யாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.5,800க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.5,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. எள் புண்ணாக்கு 50 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.2,800க்கு விற்ற நிலையில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.2,700க்கு விற்பனை யாகிறது. அதேவேளை, நல்லெண்ணெய், மல்லி மற்றும் காபி வகைகள் உள்ளிட்ட பிற அத்தி யாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல், கடந்த வார விலையே தொடர்கிறது.</p><p> </p>
