விபத்தில் காலை இழந்தவருக்கு செயற்கைக் கால் வழங்கி உதவி
5 Nov 2026, 10:50 pm

விபத்தில் காலை இழந்தவருக்கு செயற்கைக் கால் வழங்கி உதவி

விருதுநகர், நவ.5-விருதுநகர் டி.எம்.பி. குடோன் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (68), சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற் பட்ட விபத்தில் வலது காலை இழந்தார். இதையடுத்து, செயற் கைக் கால் உதவியுடன் நடந்து வந்தார். நாளடைவில் அது சேதமடைந்ததால், புதிய செயற்கைக் கால் வழங்குமாறு நெக்சுரா பில்டர்ஸ் நிறுவனத்திடம் உதவி கோரினார்.இதையடுத்து, அந்நிறுவன உரிமையாளர் பாலவிக்னேஷ், மகேந்திரனுக்கு நவீன செயற்கைக் காலை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆவே மரியான் ஆர்த் தோடிக் சென்டர் மருத்துவர் ஸ்டாலின், மாவட்ட சிலம் பாட்டச் சங்கத் தலைவர் ஜாகிர்உசேன், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் திவ்யா, காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.