தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முக்கியச் சாலைகளில் தெரு விளக்குகள் இல்லை இருளில் தத்தளிக்கும் மாவட்டத் தலைநகர் விருதுநகர்

17 Jun 2026, 9:22 pm
முக்கியச் சாலைகளில் தெரு விளக்குகள் இல்லை இருளில் தத்தளிக்கும் மாவட்டத் தலைநகர் விருதுநகர்

முக்கியச் சாலைகளில் தெரு விளக்குகள் இல்லை இருளில் தத்தளிக்கும் மாவட்டத் தலைநகர் விருதுநகர்

விருதுநகர், ஜூன் 17- மாவட்டத் தலைநகரான விருது நகரின் பல்வேறு முக்கியச் சாலை களில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அப் பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படு கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிர மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விருதுநகர் நகரின் முக்கியச் சாலைகளான 4 வழிச்சாலை, மதுரை சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, சாத்தூர் சாலை, சிவகாசி சாலை மற்றும் அருப்புக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்கு வசதி முழுமையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மதுரை சாலையில் 4 வழிச்சாலை சந்திப்பு வரை மட்டுமே தெரு விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கு அப்பால் உள்ள போக்குவரத்து பணி மனை சாலை, லட்சுமி நகர், பெத்த னாட்சி நகர் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் பகுதி, மேற்கு மற்றும் கிழக்கு பாண்டியன் காலனிகள் வரை தெரு விளக்குகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

அதேபோல், பாவாலி சாலை, புல்லலக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போதிய தெரு விளக்கு கள் இல்லை. மேலும், 4 வழிச்சாலை யில் தனியார் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை.

நகரின் உட்பகுதியில் புதிய பேருந்து நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, அல் லம்பட்டி முக்கு ரோடு முதல் சிவன் ஊரணி வரை, சிவகாசி சாலையில் ஆத்துப்பாலம் முதல் 4 வழிச்சாலை இணைப்பு பகுதி வரை தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.

குறிப்பாக, வெளியூரிலிருந்து இரவு நேரங்களில் பேருந்துகளில் வரும் பயணிகள், பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, விருதுநகர் நகரின் முக்கிய மற்றும் குடியிருப்பு பகுதி களில் உடனடியாக தெரு விளக்கு கள் அமைத்து, பொதுமக்களின் பாது காப்பையும் போக்குவரத்து வசதி யையும் உறுதி செய்ய தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.