தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

11 Jun 2026, 9:22 pm
திருச்சி விரைவு செய்திகள்

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி : ஓட்டுநர் கைது

விருதுநகர், ஜூன் 11- விருதுநகர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் கோமதி (70). இவர் மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, மீண்டும் விருதுநகர் செல்வதற்காக கே.செவல்பட்டி விலக்கிற்கு வந்துள்ளார். அப்போது கோட்டூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மகள் தீபாநாகலட்சுமி(46) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சக்திகுமார்(46) என்பவ ரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா மறைவு தமுஎகசவினர் அஞ்சலி

தேனி,ஜூன் 11- இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10 அன்று காலமானார்.அவரது உடல் தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் வியாழனன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமுஎகச சார்பில் மாவட்ட செயலாளர் ம.காமுத்துரை, மாநில துணைச்செயலாளர் அ.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் கரிசல் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் அருண் அழகு, மாநிலக்குழு உறுப்பினர் அய் தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வெவ்வேறு விபத்துக்களில் மாற்றுத்திறனாளி, இளைஞர் பலி

திருவில்லிபுத்தூர் ,ஜூன் 11- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெங்கப்பநாயக்கபட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமர் .இவர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார் . மாற்றுத்திறனாளியான இவர் கோழிக்கடையை முடித்துவிட்டு தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தில் சென்றார். கிருஷ்ணன் கோவில் ஆண்டாள் நகரைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்தக் காயமடைந்து திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீ ராமரின் தம்பி ராஜா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் ஜான் கென்னடி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் பலி

திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பூவானி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத்தொழிலாளியான இவர், புதன்கிழமையன்று இரவு வேலை முடிந்து வந்துகொண்டிருந்தார். பூவாணி விலக்கு அருகே கூமா பட்டியிலிருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கார்த்திக் பலத்தக் காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திரு வல்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலே யே கார்த்திக் இறந்து விட்டதாக கூறியுள்ளார் .மனைவி ஐஸ்வர்யா நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகரில் என்.சி.சி., கமாண்டர் ஆய்வு

விருதுநகர், ஜூன் 11 - விருதுநகரில் உள்ள என்.சி.சி., 28வது பட்டாலியன் பிரிவில் மதுரை என்.சி.சி., தலைமையகத்தின் கமாண்டர் கர்னல் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது என்.சி.சி., மாணவர்களுக்கு ஆலோ சனை, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், ராணுவ அதிகா ரிகளாக விரும்பும் மாணவர்கள் அதற்காக இப்போதே தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதில் பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் ராகேஷ் குமார் உள்பட பலர் உடனிருந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 10 காவல் சார்பு ஆய்வாளர்கள் இடமாற்றம்

விருதுநகர், ஜூன்.11- விருதுநகர் மாவட்டத்தில் போக்கு வரத்து மற்றும் ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்த காவல் சார்பு ஆய்வாளர்களை இடமாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு : அருப்புக் கோட்டை போக்குவரத்து சார்பு ஆய்வாள ராக பணிபுரிந்த லிங்கைய்யா விருதுநகர் போக்குவரத்துப் பிரிவுக்கும், சிவகாசி ஆயுதப்படை சார்பு ஆயவாளர் ஜெயக் குமார் அருப்புக்கோட்டை போக்கு வரத்திற்கும், சிவகாசி ஆயுதப்படையில் இருந்த மங்களதுரை, முத்துக்குமார், வத்ராப் ஆயுதப்படையில் இருந்த மணி கண்டன் ஆகியோர் விருதுநகர் ஆயுதப் படைக்கும், வத்ராப்பில் பணிபுரிந்த முருகன் விருதுநகர் மோட்டார் போக்கு வரத்திற்கும், விருதுநகர் ஆயுதப்படையில் இருந்த தேவதாஸ் ராஜபாளையம் நகர் போக்குவரத்திற்கும், விருதுநகர் மோட்டார் போக்குவரத்தில் இருந்த கார்த்தி கேயன் ராஜபாளையம் நெடுஞ்சாலை போக்குவரத்திற்கும், விருதுநகர் போக்கு வரத்தில் பணிபுரிந்த தங்கம் சாத்தூர் நெடுஞ்சாலை போக்குவரத்திற்கும், சாத்தூர் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்த அசோக்குமார் சிவகாசி ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

மாணவர்களின் உயர்கல்வி தொடர உதவி புரிந்திடுக! இராமநாதபுரம் ஆட்சியர் வேண்டுகோள்

இராமநாதபுரம் ஜூன்.11 பனிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் 100 சதவீதம் சேருவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசின் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களில் சிலர் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி யை தொடர முடியாத சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில், கல்வியை தொடர முடியாத மாணவர்களின் பொரு ளாதார நிலையினை கருத்தில் கொண்டும், அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பொருளாதார காரணத்தி னால் கல்வியை தொடர முடியாத மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உத விடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் அவ்வாறு சிரமப் படும் மாணவ, மாணவியர்களுக்கு பொருள் உதவியாகவோ அல்லது கல்விக் கட்டணமாகவோ கோரப்படுகின்றன. விருப்பமுள்ள நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப் பாட்டு அறையின் 04567-228016, 04567-228021 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 98948 25860, 99433 35196 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலோ தொடர்பு கொண்டோ அல்லது கட்டுப்பாட்டு அறை யில் உள்ள அலுவலரை நேரில் சந்தித்தோ தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியர்களின் கல்வியை தொடர்வதற்கு உதவிபுரிந்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகள் மீட்பு, குடமுழுக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்திடுக!

மதுரை, ஜூன். 11- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்த மான சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குட முழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், அரசுத் தரப்பு தெரிவித்த விவரங்களை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகோ வில்களின் சொத்துகளை முறையாக மீட்டு பராமரிப்பதுடன், கோவில் புனர மைப்புப் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட வாரியாக கூட்டங் கள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆக்கிர மிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரி வித்தார். கோவில் நிலங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதி பதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர், அரசுத் தரப்பு தெரிவித்த விவரங்களை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

ஒட்டன்சத்திரம், ஜூன் 11- வேடசந்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் விவசாயி அழகுவேல. இவர் பட்டா மாறுதல் செய்வதற்காக கோவிலூர் சர்வேயர் மீனாம்பிகை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத விவசாயி அழகுவேல் இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்ட் நாகராஜ், ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்த ரசாய னம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை நாயக்கனூரில் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த சர்வேயர் மீனாம்பிகையிடம் விவசாயி அழகு வேல் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீ சார் கையும் களவுமாக சர்வேயர் மீனாம்பிகையை பிடித்து கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருநெல்வேலி ஜூன் 11- நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 59) . இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளி யூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பத்தாயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.