கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேதியியல் ஆசிரியர் இல்லை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம்
7 Jun 2026, 10:43 pm

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேதியியல் ஆசிரியர் இல்லை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம்

விருதுநகர், ஜூன் 7- விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் கேந்தி ரிய வித்யாலயா மேல நிலைப் பள்ளியில் வேதியி யல் ஆசிரியர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளதுடன், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் நிரந் தர ஆசிரியர்கள் இல்லாத தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற் றோர்கள் மற்றும் சமூக ஆர் வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத் தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக எழுந்து வந்த நிலை யில், கடந்த 2009 ஆம் ஆண்டு பள்ளி தற்காலிக மாக தொடங்கப்பட்டது. பின் னர் விருதுநகர் – மல்லாங்கி ணறு சாலையில் வரலொட்டி அருகே நிரந்தர வளாகம் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த பள்ளி யில் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குழந் தைகள் உட்பட ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியி யல் பாடம் கற்பிக்க ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகுவதில் சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு பாடங்களுக்கு நிரந்தர ஆசி ரியர்கள் நியமிக்கப்படாத தால் கல்வித் தரம் பாதிக் கப்படுவதோடு, மாண வர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளியில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உட னடியாக நிரப்பி, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தகுதி யான நிரந்தர ஆசிரியர் களை நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வ லர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, தென் மாவட்ட மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலை யிட்டு விரைவான தீர்வுகாண வேண்டும் என்றும் கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.