குப்பைகளை அகற்றாத கூரைக்குண்டு ஊராட்சி நெகிழிகளை உண்ணும் கால்நடைகள்
yesterday
<p><strong>குப்பைகளை அகற்றாத கூரைக்குண்டு ஊராட்சி நெகிழிகளை உண்ணும் கால்நடைகள்</strong></p><p>விருதுநகர், ஜூன் 21- விருதுநகர் அருகே உள்ள கூரைக் குண்டு ஊராட்சியில் குப்பைகளை அகற் றும் பணி சரிவர நடைபெறாத காரணத்தால் சாலையோரம் வீசப்படுகின்றன. விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூரைக்குண்டு ஊராட்சி. இங்கு அல்லம் பட்டி, முத்துராமலிங்கம் நகர், பழைய சிவ காசி சாலை, மாடன் நகர், பாலம்மாள் நகர், நிறைவாழ்வு நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 25 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குப்பைகளை வீடு தோறும் தினசரி சேகரிக்க போதுமான பணி யாளர்களை ஊராட்சி நிர்வாகம் நியமிக்க வில்லை. இதன் காரணமாக பொது மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை வீசுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், பழைய சிவகாசி சாலை மற்றும் முத்துராமலிங்கம் நகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பை கள் குவியல் குவியலாக காணப்படுகிறது. இதனை உடனுக்குடன் அகற்றும் பணி யைக் கூட ஊராட்சி நிர்வாகத்தினர் செய்வ தில்லையென பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர். பழைய சிவகாசி சாலையில் கொட்டப் பட்ட குப்பைகளில் ஏராளமான நெகிழிப் பை களும் கிடக்கின்றன. பொது மக்களில் சிலர் தங்கள் வீடுகளில் மீதமாகும் உணவுப் பொருட்களை நெகிழிப் பைகளில் கட்டி சாலையோரம் வீசுகின்றனர். இதனை ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் உண்ணும் போது நெகிழித் துண்டுகளும் அவைகளின் வயிற்றுக்குள் செல்கின்றன. இதனால் நாளடைவில் அவை இறந்து விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய சிவகாசி சாலை, முத்துராமலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் நாள்தோறும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
