விருதுநகரில் ஜமாபந்தி : கிராம வாரியாக முறையான அறிவிப்பு இல்லாததால் பொது மக்கள் ஏமாற்றம்
12 Jun 2026, 9:40 pm
<p><strong>விருதுநகரில் ஜமாபந்தி : கிராம வாரியாக முறையான அறிவிப்பு இல்லாததால் பொது மக்கள் ஏமாற்றம்</strong></p><p>விருதுநகர், ஜூன் 12- விருதுநகர் வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி பற்றி முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டம் முழு வதும் வட்டாட்சியர் அலுவலகங்க ளில் ஒவ்வொரு ஆண்டும் ஜமா பந்தி நடத்தப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு மாவட்ட நிர்வா கத்தினால் வெளியிடப்படுகிறது. 16 வகையான விதிமுறைகளின்படி ஜமாபந்தி நடைபெற வேண்டு மென மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 3 ஆவது விதியாக, வரு வாய் தீர்வாயம் நடைபெறுவது குறித்து அனைத்து கிராம மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அப்பகுதியில் 15 நாட்களுக்கு முன்பே விளம்பரம் செய்ய வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது. ஆனால், அதன்படி சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி யில் விளம்பரம் செய்யப்பட வில்லையென கூறப்படுகிறது. குறிப்பாக, விருதுநகர் நக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோட்டைப்பட்டி, விருதுநகர், ரோசல்பட்டி, அல்லம்பட்டி, பாவாலி ஆகிய கிராமங்கள் வரு கின்றன. இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் வீட்டிற்கானப் பட்டா இன்றி தவித்து வருகின்ற னர். இதை முன் கூட்டியே விளம் பரம் செய்திருந்தால் அப்பகுதி பொது மக்கள் மனு அளிக்க தயா ராகி வட்டாட்சியர் அலுவலகத் திற்கு வந்திருப்பார்கள். மேலும் அதில், பாசன ஆதா ரங்கள், நிலச்சீர்த்திருத்தச் சட்டம் செயல்படுத்துதல், வீட்டுமனை ஒப்படை, பட்டா மாறுதல் மற்றும் நில ஒப்படை போன்றவை ஆய்வு க்கு எடுக்கப்படும் எனவும் கூறப் பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகளுக் கான ஐ.டி உருவாக்கி, அதை பதி வேட்டில் சேர்ப்பது, எதிர்காலத்தில் உரங்கள் கொள்முதல், எம்.எஸ்.டி கொள்முதல் வசதி பெறு தல் போன்றவை குறித்து விவசாயி களுக்கு விளக்கம் தருதல், சட்டப்படியான வாரிசுகளுக்கு பட்டா மாற்றம் செய்ய வசதி ஏற் படுத்துதல் போன்றவை ஜமா பந்தியில் செய்து தரப்படும் என முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் கள் கிராம மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் ஜமா பந்தி நிகழ்வானது சம்பிரதாய நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின் றனர். மேலும், ஒவ்வொரு தாலுகாவி லும் எந்தெந்த கிராமங்களுக்கு என்றைக்கு மனுக்கள் வாங்கப் படுகிறது என முறையாக எப் போதும் அறிவிக்கப்படுவதில்லை. இதனால் மனுக் கொடுக்க வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் வெள்ளியன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தியை சாத்தூர் கோட்டாட்சியர் துவக்கி வைத்தார். அதில் வெறும் 135 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அதில் 36 மனுக்களுக்கு தீர்வு வழங்கப் பட்டது.</p>
