மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞரை மீட்டு குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்
9 Oct 2026, 11:29 pm

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞரை மீட்டு குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

விருதுநகர், அக்.9-திடீர் மனநல பாதிப்பால் சாலையில் சுற்றித் திரிந்த வடமாநில இளைஞரை மீட்டு சிகிச்சையளித்து குணப்படுத்திய விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர், தனது நண்பர்களுடன் ஏதாவது வேலை கிடைக்குமா? என தமிழகத்தில் உள்ள உள்ள நகரங்களுக்கு வந்துஉள்ளனர். கடைசியாக கோவில்பட்டி வந்த அந்த இளைஞருக்கு திடீரென மனச்சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னுடன் வந்தவர்களை விட்டு விட்டார். பின்னர், தன்னிலை மறந்து உணவின்றி சாலையில் சுற்றித் திரிந்துஉள்ளார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது.

இந்தநிலையில், விருதுநகர் சாலையில் அலங்கோலமான நிலையில் கிடந்த அந்த இளைஞரை விருதுநகர் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மீட்டுள்ளனர். பின்பு, அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். முதலில் அவரது உடலில் காயங்களுக்கான சிகிச்சையளிக்கப்பட்டது. பின்பு, உடல்நலக் குறைவை சீர் செய்த மருத்தவர்கள், மனநல உள்நோயாளிகள் பிரிவிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மனநல மருத்துவர்கள் 20 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதில் அவருக்கு சுய நினைவு திரும்பியது. பின்னர்,தனது குடும்ப உறவினர்களின் அலைபேசி எண்ணைக் தந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், இளைஞரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்து விருதுநகர்மருத்துவமனைக்கு வரவழைத்தனர்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்று முழு குணமடைந்த ஜார்கண்ட் இளைஞரை மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதா ராணி, துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி முன்னிலையில் அவரது சகோதரரிடம் ஒப்படைத்தனர்.

வடமாநில இளைஞரை காப்பாற்றிய மன நலத்துறை தலைவர் காட்சன், மருத்துவர்கள் பூங்கொடி, நிரநஞ்சனா தேவி, செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.