790 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
2 Feb 2026, 3:32 pm
<p><strong>790 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றி விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை</strong></p>
<p>விருதுநகர், பிப்.2- இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள பூபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (33) - முத்துமாரி (23) தம்பதியருக்கு, கர்ப்ப காலம் 26 வாரங்களி லேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, முத்துமாரியை விருது நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில், கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந் தது. குழந்தையின் பிறப்பு எடை வெறும் 790 கிராம் மட்டுமே இருந்தது. இதனால், குழந்தையை உடனடியாக பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவக் குழுவினரின் தொடர்ச்சி யான தீவிர சிகிச்சையில், 79 நாட்கள் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. இதன் விளை வாக, குழந்தையின் எடை சுமார் 1500 கிரா மாக உயர்ந்ததுடன், ஆரோக்கியமான நிலை யில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தாயுடன் குழந்தையையும் திங்களன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருத்துவமனை கண்கா ணிப்பாளர் அரவிந்த் பாபு கூறுகையில், “விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு, ஆயி ரம் கிராமிற்குக் குறைவான எடையுடன் 40 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 20 குழந்தைகள் உயிருடன் காப்பாற்றப்பட் டுள்ளன. மேலும், 1500 கிராமிற்கு குறை வான எடையுடன் பிறந்த 150 குழந்தைகளில், 135 குழந்தைகள் நலமாக வீட்டிற்கு அனு பப்பட்டுள்ளன” என்றார். கர்ப்ப காலத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாதது, மருந்துகளை முறையாக உட்கொள்ளாதது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்ற கார ணங்களால் எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், எனவே கர்ப்பிணிகள் தங்களது உடல்நலத்தை மிக கவனமாகப் பேண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், உறைவிட நிலைய மருத்துவர் வைஷ்ணவி, குழந்தைகள் நல மருத்துவர்கள் ராதிகா, சண்முகமூர்த்தி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
