தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்'

25 May 2026, 10:18 pm
2 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்'
<p><strong>2 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்&#39;</strong></p><p>விருதுநகர், மே 25- விருதுநகர் மாவட்டத்தில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு இல வச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலை யில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் 21,191 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் 21,850, மூன்றாம் வகுப்பில் 20,704, நான்காம் வகுப்பில் 21,459, ஐந்தாம் வகுப்பில் 20,675, ஆறாம் வகுப்பில் 23,669, ஏழாம் வகுப்பில் 25,182, எட்டாம் வகுப்பில் 25,292, ஒன்பதாம் வகுப்பில் 27,814, பத்தாம் வகுப்பில் 24,867 பேருக்கும் தமிழ், ஆங்கி லம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பில் 23,036, பனி ரெண்டாம் வகுப்பில் 19 ஆயிரம் மாணவர் கள் என சுமார் 2 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கான இயற்பியல், வேதி யியல், கணிதவியல், உயிரியல், விலங்கி யல், தாவரவியல், மனையியல், செவிலியி யல், இயந்திரவியல், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட இலவச புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இலவச பாடப்புத்தகங்கள் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் அண்ணாமலையம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வட்டார அலுவல கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்பு, மே 27, 28 முதல் அரசு பள்ளிகளுக்கு விநி யோகம் துவங்கும். அதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநி யோகிக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த தலைமையா சிரியர்கள் புத்தகங்களை பெற்றுச் செல்ல உள்ளனர் என தகவல்கள் வெளியாகி யுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.