விருதுநகர் மாவட்டத்தில் 8 மையங்களில் பட்டாசு தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம்
5 Jun 2026, 11:06 pm

விருதுநகர் மாவட்டத்தில் 8 மையங்களில் பட்டாசு தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம்

விருதுநகர், ஜூன் 5- விதிகளுக்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி, விபத்து மற்றும் உயிர்ப் பலி இல்லாத பட்டாசு பணிகள் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிஐடியு- விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் இணைந்து பட்டாசுத் தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு பட்டாசுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என்.தேவா, மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டி யன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ட்டுள்ளனர். அதில் கூறியதாவது : விருது நகர் மாவட்டத்தின் பிரதான தொ ழிலாக திகழ்ந்து வருவது பட்டாசு தயாரிப்பு ஆகும்.

பாரம்பரியமிக்க 100 ஆண்டுகளை கடந்த தொழிலா கும். மாவட்டத்தில் 1200 ஆலைக ளில் சுமார் 8 லட்சம் தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக இந்தத் தொழி லில் ஏற்பட்டு வரும் போட்டி, கால நிலை மாற்றம், விதிமுறைகளை பின்பற்றாமை போன்ற காரணங்க ளால் அவ்வப்போது வெடிவிபத்து க்கள் ஏற்படுகிறது.

இதில் சிக்கிய தொழிலாளர் கள் உடல் சிதறி கொடூரமான முறையில் உயிர்ப்பலியாகின்ற னர். இது பெரும் கவலையளிக் கும் விசயமாக இருந்து வரு கிறது.

இந்தநிலையில், தமிழக அர சும் மாவட்ட நிர்வாகமும், விபத்து களைத் தடுத்திட பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றன. இருந்தபோதும், அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியாத நிலை உள்ளது.

எனவே, விதிகளுக்கு உட்பட்டு பட்டாசு உற்பத்தி, விபத்து இல்லாத பட்டாசு வேலை, உயிர்ப் பலி இல்லாத பட்டாசு பணிகள் என் பதை வலியுறுத்தி, சிஐடியு- விருது நகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சிவகாசி அருகே யுள்ள விஸ்வநத்தம், முருகன் காலனி, திருத்தங்கல், ஆனையூர், விருதுநகர் அருகேயுள்ள சேர்வைக்காரன்பட்டி, கன்னிசேரி, ஓ கோவில்பட்டி, சாத்தூர் அருகே யுள்ள மேட்டமலை, படந்தால், ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை ஆகிய 8 இடங்களில் பட்டாசு தொழி லாளர்களுக்கான பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வரும் ஜூன் 7 முதல் 14 வரை இக்கருத்தரங்கள் நடைபெற உள்ளன. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரக அதிகாரிகள், இஎஸ்ஐபிஎப் திட்ட அதிகாரிகள், வருவாய்த் துறை யினர், சிஐடியு பட்டாசு தீப்பெட்டி சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பட்டாசு தொழிலாளர்க ளுக்கு முழுமையான பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் விதிக ளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலை களை செயல்படுத்தவும் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

எனவே, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு தொழி லாளர்கள் இந்த பாதுகாப்பு கருத்த ரங்கில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.