விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்து - 17 பேர் உயிரிழப்பு!
19 Apr 2026, 5:49 pm

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் அருகே, வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரை தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"விபத்து நிகழ்ந்தபோது ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.