தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை வழங்காமல் ஏமாற்றும் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுத்திடுக! விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

24 Jul 2026, 9:56 pm
கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை வழங்காமல் ஏமாற்றும்  தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுத்திடுக!  விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை வழங்காமல் ஏமாற்றும் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுத்திடுக!

விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூலை 24- விவசாயிகளிடம் கரும்புகளை வாங்கி பல ஆண்டுகள் ஆகியும் பணத்தை தனியார் சர்க்கரை ஆலை வழங்காமல் ஏமாற்றி வரு கிறது.

எனவே, ஆலை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தி னர்.

விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, மேகமலை புலிகள் காப் பக துணை இயக்குனர் ரவி மீனா, வேளாண்மை துணை இயக்குநர் அ.அம்சவேணி, இணை இயக்கு நர் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் அறுமுகம், துணை இயக்குநர் ( வணிகம் விற் பனை) வளர்மதி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

அதில் நடைபெற்ற விவாதம் வருமாறு : தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளிடம் கரும்பு களை வாங்கி, அதற்கான பணத்தை பல ஆண்டுகள் வழங்காமல் காலம் கடத்தி வருகிறது.

இதனைக் கண்டி த்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாதத்திற்குள் பணத்தை வழங்கு வதாக ஆலை நிர்வாகம் தெரி வித்தது. ஆனால், தற்போது வரை வழங்கவில்லை. எனவே, விவசாயி களை ஆலை நிர்வாகம் ஏமாற்றி வருகிறது.

ஆலை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வி.முருகன் தெரிவித்தார். அப்போது பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர், குறைதீர் கூட்டத்திற்கு மேலாளர் வர வேண்டியதில்லை.

ஆலை நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகி கள், துணைத் தலைவர் உள்ளிட் டோர் உடனடியாக நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். பொதுப்பணித்துறை மற்றும் யூனியன் கண்மாய்களில் விவசா யிகள் வண்டல் மண் எடுக்க அனு மதி வழங்க வேண்டுமென தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுரு கன் கோரிக்கை விடுத்தார்.

அதன் பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர், சில இடங்களில் முறை கேடு நடைபெறுகிறது.

எனவே, விவசாயிகள் தான் வண்டல் மண் கேட்கிறார்களா? என ஆய்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

வனவிலங்குகளால் சேதம்:நிவாரணம் வழங்கிடுக மலையடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் பயிர்கள் சேத மடைகின்றன.

அதற்கு உடனடி யாக நிவாரணம் வழங்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா கோரிக்கை விடுத்தார். காட்டுப் பன்றிகளை சுட்டுப் பிடிக்க கிராம அளவிலான குழு அமைக்கப்பட்டது.

இதுவரை எத்தனை பன்றிகள் அழிக்கப் பட்டுள்ளன என தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.முருகன் கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த வனத்துறை அலுவலர் 2025இல் 13 பன்றிகள் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கிராமக் குழு வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடும் பட்சத்தில் தொடர் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட விஜய முருகன், இப்பிரச்சனையில் கேர ளாவில் வனத்துறை சிறப்பாக செயல்படுகிறது. அதைப் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் மிரு கங்களை தடுக்க அகழியும், மின் அதிர்வு வேலியும் அமைக்கப் பட்டது. ஆனால் மிருகங்கள் வந்து கொண்டுதான் உள்ளது.

இதனால் பல கோடி ரூபாய் வீணடிக்கப்படு கிறது எனத் தெரிவித்தார். என் தோட்டத்தில் இருந்த 200 தென்னங் கன்றுகளை யானைகள் சேதப்படுத்தி விட்டன. புதிய தென்னங்கன்றுகள் வழங்க வேண்டுமென ராசய்யா கோ ரிக்கை விடுத்தார்.

மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைத்து மக்காச் சோ ளத்தை விவசாயிகளிடம் நேரடி யாக வாங்க வேண்டும் என சிவசாமி தெரிவித்தார்.

அப்போது பேசிய வேளாண் துறையினர், மக்காச் சோள விவ சாயிகள், வியாபாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சிய ரிடம் வழங்கப்பட்டுள்ளது.

விரை வில் விவசாயிகள், விற்பனையா ளர்கள், அரசு அலுவலர்கள்

கொண்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி மக்காச் சோளம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். நென்மேனி பகுதியில் ஆற்றின் ஒரு கரையில் உள்ள விவசாய நிலங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படு கிறது. ம

று கரையில் உள்ள நிலங்க ளுக்கு குறைவான நேரம் பார பட்சமாக மின்சாரம் வழங்கப்படு கிறது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த மின்வாரி யத்தினர், எந்த பகுதியிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப் படவில்லை.

விதி விலக்காக ஒரு சில பகுதிகளில் பின்னூட்டம் முறையில் மின்சாரம் கிடைத்தி ருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப் பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.