தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் மன்றாடியும் வட்டாட்சியர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி தருவதில்லை விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

25 Sept 2026, 8:44 pm
விவசாயிகள் மன்றாடியும் வட்டாட்சியர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி தருவதில்லை விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விவசாயிகள் மன்றாடியும் வட்டாட்சியர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி தருவதில்லை

விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர், செப்.25-விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாயில் அள்ளுவதற்கு அனுமதி கோரினால் வட்டாட்சியர்கள் வழங்க மறுப்பதாகக் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி முன்னிலை வகித்தார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாக உள்ளதால், ஏராளமான பயிர்கள் சேதமடைந்தன. எனவே, பயிர் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென ராம்பாண்டியன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வேளாண் அலுவலர், கடந்த ஆண்டு நெல்லுக்கு இழப்பீடாக சுமார் ரூ.8.25 கோடி வரை வந்துள்ளது என்றார்.உலர் களம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்மென அம்மையப்பன் கோரிக்கை விடுத்தார்.நிகழாண்டு 25 உலர்களம் அமைக்க அனுமதி கோரியுள்ளோம். கிடைத்தவுடன் அமைக்கப்படும் என்றார்.

இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்களை கொப்பரையாக மாற்றசூரிய மின் சக்தி மூலம் இயங்கும் களம் அமைக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளித்த இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் நேரில் இடத்தை ஆய்வு செய்துள்

ளார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கடந்த 2002 ஆம் ஆண்டு இலவச மின் இணைப்பு 244 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என ஆணை உள்ளது. ஆனால், தற்போது வரை மின்சாரம் வரவில்லை. விவசாய நிலத்திற்கு தேவையான கரம்பை மற்றும் வண்டல் மண்ணை கண்மாயில் அள்ளுவதற்கு அனுமதி கோரினால் வட்டாட்சியர்கள் வழங்கமறுக்கின்றனர். இதனால் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றனர் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அ.விஜயமுருகன் தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த ஆட்சியர், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தி கரம்பை மற்றும் வண்டல் மண்எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கால்வாய்களுக்கு தண்ணீர் வழங்க உரிமை

வைகை ஆற்றில் அதிக தண்ணீர் வரும் போது அதிலிருந்து உபரி நீர் கிருதுமால் நதிக்கு

விடப்படுகிறது. வைகை ஆற்றில்விரகனூர் அணையில் எப்போதாவது ஒருமுறை நிரம்பக் கூடும்.

இதன் காரணமாக கிருதுமால் நதிக்கு உபரி நீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. எனவே, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட கண்மாய்பாசனங்களுக்கு ஆயக்கட்டு முறையில் வைகையிலிருந்து தண்ணீர் வழங்குவது போல் கிருதுமால் நதி, நிலையூர் கம்பிக்குடி, சென்னம்பட்டி கால்வாய், குண்டாறு சென்னம்பட்டி கால்வாய்களுக்கும் தண்ணீரை ஆண்டு தோறும் வழங்க உரிமை வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரி, இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.3 வருடங்களாக கோரிக்கை விடுத்தும் தாதம்பட்டி கண்மாய் மற்றும் கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை என்று விவசாயிகள் சங்க விருதுநகர் ஒன்றிய செயலாளர் பெருமாள்ராஜ் புகார் தெரிவித்தார்.

இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.மேலும் இதில், வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, மண்டல மேலாளர் (நுகர்பொருள் வாணிப கழகம்) பால்பாண்டி, நேர்முக உதவியாளர் அம்சவேணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) இந்திரா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.