தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மும்முனை மின்சாரம் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள் விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

30 Oct 2026, 10:17 pm
மும்முனை மின்சாரம் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள் விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

மும்முனை மின்சாரம் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள் விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விருதுநகர், அக்.30 -விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இரவு நேரத்தில் வழங்கப்படவில்லை. இதனால் நெல் விவசாயம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று விருதுநகரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய்அலுவலர் சசிகலா, வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அ.அம்சவேணி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) இந்திரா, தோட்டக்கலை துணை இயக்குநர் அ.ஆறுமுகம், வேளாண்மை துணைஇயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு :வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. நெல் விதைகள்போதுமான கையிருப்பு உள்ளதா?.அதிக மகசூல் தரும் ஸ்ரீநெல் வேண்டும் என சிவசாமி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த வேளாண்மைத்துறை அதிகாரி, தற்போது வரை 22 டன் நெல் விதைகள் கையிருப்பு உள்ளது. ஸ்ரீநெல் வேண்டுமென அரசுக்குகருத்துரு அனுப்பி பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்தார்.விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் கொண்டு போக பிளாஸ்டிக் குழாய்கள் மானிய விலையில் வழங்கவேண்டுமென இராஜேந்திரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வேளாண்துறையினர், கடந்த காலங்களில் எச்.டி. பைப் வழங்கப்பட்டது. தற்போது அத்திட்டம் நடைமுறையில் இல்லை. திட்டங்கள் வந்தால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வறட்சி மாவட்டமாக அறிவித்திடுக

தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. வடகிழக்குப் பருவ மழையால் ஏராளமான கண்மாய்களில் 5 முதல்10 சதவிகிதம் மட்டுமே தண்ணீர்உள்ளது. எனவே, வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பலவிவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.தென்னை விவசாயிகள் மற்றும் தோட்டக் கலை பயிர் செய்யும்விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானியமாக வழங்க வேண்டும். அதன் மூலம் விளையும் இளநீரை பருகினால் பொது மக்கள் மேலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயமுருகன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வேளாண்துறையினர், தென்னை டானிக்கை மரத்தைச் சுற்றி ஊற்றினால் பூச்சிகள் அழியும். நல்ல மகசூல் கிடைக்கும். மேலும், மண்புழு உரம் தயாரிக்க செட் அமைத்துஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட பல விவசாயிகள் 4 வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறோம். தென்னை டானிக் தரவேஇல்லை எனப் புகார் தெரிவித்தனர்.

கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தர மறுப்பு

மேலும் பேசிய விஜயமுருகன், பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் விவசாயிகளுக்கு தள்ளுபடி என அரசு அறிவித்துள்ளது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன்தர மறுக்கின்றனர். வருவாய்ததுறையினர் அடங்கல் தருவதில்லை. குறிப்பாக புதுக்கோட்டை, சேத்தூர், கல்குறிச்சி, மாந்தோப்பு, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி ஆகியக் கூட்டுறவு சங்கங்களில்பணிபுரியும் அதிகாரிகள், எவ்வித வேலையும் செய்வதில்லை. விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். எனவே, அனைவரையும்இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், தள்ளுபடி பணம் போக மீதத்தொகையை நகைக்கு செலுத்தி அதை மீட்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தாலும் திருப்ப விடுவதில்லை. அபராத வட்டி, கூட்டு வட்டியை உடனே செலுத்த வேண்டுமென போனில் மிரட்டுகின்றனர் எனப் பல விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்பு பேசிய ஆட்சியர், அனைத்து கூட்டுறவு சங்கங்கள் முன்பும் பதாகைகள் வைத்து விளக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் செய்தி வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் இதுபோன்ற புகார்எழுந்துள்ளது. விவசாயிகள் எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் இரவு நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படவில்லை. இதனால் வத்திராயிருப்பு, கான்சாபுரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் நெற் பயிர்கள் நாசம் அடையும் நிலை உள்ளது. எனவே, மாநிலஆணையரைச் சந்தித்து மின்சாரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென விஜயமுருகன் கோரிக்கைவிடுத்தார்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

விவசாய மோட்டார்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்காத காவல்துறை

விவசாயிகளின் மோட்டார், ஸ்டாட்டர், வயர்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். கோவிலில் இருந்த வெண்கல மணிகளையும் திருடியுள்ளனர். மாவட்டம் முழுவதும்மோட்டார்களை திருடிச் செல்வோர் மீது காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தபோதும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ரோந்து பணிகளில் சரிவர ஈடுபடுவதில்லை.இதனால் விவசாயிகளுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் கேள்விக் குறியாகும் நிலை உள்ளது என தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் புகார் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், காரியாபட்டி, சேத்தூர்உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையினர் மூலம் மோட்டார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கையாடல்

மேலும் கடந்த 2016-17 காலங்களில் கூட்டுறவு சங்கங்களின் இருந்த நிர்வாகிகள் விவசாயிகளின் நகைகளை சட்ட விரோதமாக கையாடல் செய்துள்ளனர். அதை மீட்க வேண்டும். அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.மேலும் டிராக்டர்கள் கோரி ஏராளமான விவசாயிகள் மனு அளிதுள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லையெனவும் முருகன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஆட்சிர், இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் இருந்தால் அதனை கையகப்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

டில்லர், பவர் டில்லர் கோரினால் உடனே வழங்கலாம். டிராக்டர்கள் நிறைய வேண்டுமென எழுதி அனுப்பினாலும் குறிப்பிட்ட அளவில் குறைவாகவேதருகின்றனர் என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.