தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக!

19 Jun 2026, 10:10 pm
பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக!

பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்திடுக!

விருதுநகர், ஜூன் 19 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் விவசா யத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: மம்சாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஞானகுரு பேசு கையில், “விருதுநகர் மாவட்டத் தில் மா விவசாயம் செய்யப்படு கிறது.தேவதானம் முதல் பேரை யூர் வரை சுமார் 10,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் மா விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. அதிகமான மாம்பழ விளைச்சல் உள்ளது .சரி யான விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது தொழிற் சாலைகளுக்கு அனுப்பவோ முடி யாத நிலை உள்ளது. இதனால் மா விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். எனவே, மா விவசாயத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாம்பழங்களை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றும் பழச்சாறு தயாரிப்பு நிறுவனங்களு டன் அரசு ஒப்பந்தம் செய்து, மாம் பழங்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

மா விவசாயத்திற்கு காப்பீடு வழங்க நடவடிக்கை

அதற்குப் பதிலளித்த இணை இயக்குனர், “தற்போது தமிழ்நாட் டில் எந்த மாவட்டத்திலும் மாம்பழத் திற்குப் பயிர் காப்பீடு வழங்க வில்லை. விரைவில் மா விவசா யத்திற்கும் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பதிலளிக்கையில், “மாம்பழங் களை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசின் ‘அக்ரி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்’ (AIF - Agri Infrastru cture Fund) என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளு க்கு நிதியுதவிகள் மற்றும் மானி யங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. இத்திட்டம் குறித்து மா விவசா யிகளுக்கு விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு, விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் கடந்த ஆண்டு நெல் விவசாயம் கடுமையாகப் பாதிக் கப்பட்டது. இதற்காக ரூ.12 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டது. எனவே,தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.தமிழக அரசுக்கு இது குறித்து பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் பதில் அளித் ்தனர்.

தேவையான உரம் வழங்கிடுக

மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக எடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து மணல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை தளர்த்தி மணல் வழங்க உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளு படி செய்ய வேண்டும், தரக்கட்டுப் பாட்டு அதிகாரியின் உத்தரவால் கடைகளில் உரம் வழங்குவதில்லை.எனவே விவசாயிகளுக்கு உடனடி யாக உரம் வழங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான‌ நஷ்ட ஈட்டினை விவசாயிகளுக்கு வனத்துறையி னர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அ. விஜய முருகன் கோ ரிக்கை விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.